2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

விபத்தில் சிக்கி இயக்கச்சியில் 5 பேர் படுகாயம்

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 18 , பி.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சரண்யா)

இயக்கச்சியில் நேற்று சனிக்கிழமை மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் படுகாயமடைந்ததுடன் சாரதி அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த இ.போ.ச. பேரூந்து ஒன்றும், யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா வந்திருந்த தென்பகுதி மக்களை ஏற்றிக் கொண்டு பலாங்கொடை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ்வண்டியும் இயக்கச்சிப் பகுதியில் மதியம் 1 மணியளவில் நேருக்கு நேர் மோதிக் கொண்டமையாலேயே இந்த பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையிலும், பலாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலாங்கொடை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ்ஸின் சாரதி ஆபத்தான நிலையில் அவசரசிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்துக்கு உடன் விரைந்த பளை பொலிஸார் இந்த விபத்துக் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--