2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

வவுனியா மாவட்டத்தல் 94,367 பேர் வாக்காளர்களாக பதிவு

Kogilavani   / 2013 ஜூலை 27 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மாவட்டத்தில் 94,367 பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்படடுள்ளனர் என வவுனியா மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் என். கருணாநிதி தெரிவித்தார்.

வட மாகாணசபை தேர்தலில் வவுனியா மாவட்ட வாக்குப் பதிவாளர்கள் தொடர்பில் அவரிடம் கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

'தற்போதுள்ள வாக்காளர்களுடன் மேலதிகமாக பதிவு செய்யப்படவுள்ளவர்களின் விபரங்களும் இத் தொகையுடன் சேர்க்கப்படவுள்ளது. இவர்கள் வாக்களிப்பதற்காக 81 வாக்களிப்பு நிலையங்கள் வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ளன.

தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை கோரியதன் அடிப்படையில் அவை தற்போது கிடைத்த வண்ணமுள்ளன.

அந்த வகையில் தபால் மூலமாக வாக்களிக்க விரும்புபவர்கள் விண்ணப்பங்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதிக்கு முன் எமக்கு கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும்.

அதேபோல் இடம்பெயர்ந்தவர்கள் 2012 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து வௌ;வேறு காரணங்களுக்காக வேறு மாவட்டங்களில் வசிக்கும் பட்சத்தில் இவர்கள் இடம்பெயர்ந்த பிரதேசத்திலேயே வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் கிராம அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு விண்ணப்பிக்க வேண்டியவர்கள் நேரடியாக விண்ணப்பப் படிவங்களை தேர்தல் ஆணையாளருக்கோ அல்லது எம்மிடமோ சமர்ப்பிக்க முடியும்.

இதேவேளை வட மாகாண தேர்தலுக்காக வவனியா மாவட்டத்தல் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது என தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--