2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

அனாதரவாக திரிந்த பெண் சடலமாக மீட்பு

Editorial   / 2020 பெப்ரவரி 14 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அருகில், பெண்ணின் சடலம் ஒன்றை பொலிஸார், இன்று மீட்டுள்ளனர்.

பெண்ணின் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த சிலர், அது தொடர்பாக வவுனியா பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்திருந்தனர்.

அதற்கமைய, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

45 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், இவர் நீண்ட காலமாக வவுனியா நகரில் யாசகம் செய்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .