2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

ஜம்புக்குளத்தைக் காணவில்லை

Editorial   / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி - கோரக்கன்கட்டு பகுதியில், சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக காணப்பட்ட சிறிய குளமான ஜம்புக்குளம், கடந்த சில தினங்களுக்கு முன் தனியார் ஒருவரால் கனரக வாகனங்கள் கொண்டு முழுமையாக மூடப்பட்டுள்ளது.

குறித்த குளமானது, இந்தப் பிரதேசத்தில் உள்ள கால்நடைகளுக்கான குடிநீர்த் தேவையை நிறைவு செய்யும் ஓர் குளமாகக் காணப்பட்டதுடன், குளத்தை அண்மித்த பகுதிகளில் உள்ள கிணறுகளிலும் நன்னீர் காணப்பட்டதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த குளத்தை தனி நபரொருவர் ஆக்கிரமித்து, அதனை முழுமையாக அழித்து, மண் நிரவி மூடியுள்ளதாகவும், அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனால், எதிர்காலத்தில் இப்பிரதேசத்தில், கால்நடைகளுக்கான நீர் இல்லாமல் போவதுடன், அருகிலுள்ள கிணறுகளிலும் தண்ணீர் இல்லாமல் போகும் நிலை ஏற்படுமெனவும், அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில், கமநலசேவை நிலையம், மாவட்டக் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஆகியோரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும், அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X