2020 ஓகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை

தொடர் அடை மழை; கண்டாவளையில் 181 பேர் பாதிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

தொடர் மழை காரணமாக, கிளநொச்சி - கண்டாவளை பிரதேசத்தில், 65 குடும்பங்களை சேர்ந்த 181 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.

கிளிநொச்சி, பரந்தன், தர்மபுரம், கட்டைக்காடு, பிரமந்தனாறு ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு வெள்ள அனர்த்தத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.

தொடர் மழை காரணமாக, கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சிவபுரம் பகுதி மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள வீடுகள் சிலவற்றுக்குள் வெள்ள நீர் உட்சென்றுள்ளது. தொடர்ந்தும் அப்பகுதியல் சில இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--