2020 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை

‘நந்திக்கடலை துப்புரவு செய்யாவிடின் சில மாதங்களில் நீர் வற்றிவிடும்’

Editorial   / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

நந்திக்கடல் பகுதிகளில் காணப்படும் கழிவுகளை அகற்றி துப்புரவு செய்யாவிடின், வருடாந்தம் குறிப்பிட்ட சில மாதங்களில் நீர் வற்றி விடும் அபாயமுள்ளதாக, அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அப்பகுதி கடற்றொழிலாளர்கள், குறித்த கடற்பகுதியானது, ஆழிப்பேரலை அனர்த்தம், வெள்ளப் பாதிப்புகள் காரணமாக, கழிவுகளும் மண்ணும் நிரம்பி ஆழம் குறைவடைந்து காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இந்தக் கழிவுகளையும் மண்ணையும் அகற்றித் துப்புரவு செய்து தருமாறு கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அதற்கான நிதியொதுக்கீடுகள் கிடைக்ககப்பெற்று, கழிவுகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டபோது, வனஜீவராசிகள் திணைக்களம் தடை விதித்ததாகத் தெரிவித்த அவர்கள், இதனால், ஒதுக்கப்பட்ட நிதி திரும்பிச்சென்றுள்ளதாகவும் கூறினர்.

எனவே, நந்திக்கடல் பகுதிகளில் காணப்படும் கழிவுகளை அகற்றி துப்புரவு செய்யாவிடின், வருடாந்தம் குறிப்பிட்ட சில மாதங்களில் நீர் வற்றி விடுமமெனவும் இதனால் தமது தொழில்கள் முழுiயாகவே பாதிக்கப்பட்டு விடுமென்றும், அப்பகுதி கடற்றொழிலாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .