2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

நந்திக் கடலைத் துப்புரவு செய்யுமாறு டக்ளஸிடம் கோரிக்கை

Editorial   / 2019 நவம்பர் 24 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

நந்திக் கடலைத் துப்புரவு செய்வதற்கு, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுக்க வேண்டுமென, முல்லைத்தீவு மாவட்டக் கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் திருஞானதீபன் அன்டனி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தரைத்த அவர், கடந்த பத்தாண்டுகளாக ,முல்லைத்தீவு மாவட்டக் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலே உள்ளனவெனவும் குற்றஞ்சாட்டினார்.

அவற்றில், நந்திக் கடல் துப்புரவு செய்தல், வௌிச்சவீடு நிர்மாணித்தல் என்பன முக்கியமானவையெகுமெனத் தெரிவித்த அன்டனி, நந்திக் கடல் துப்புரவு செய்யப்படாததன் காரணமாக, 5,000க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனவெனவும் சுட்டிக்காட்டினார்.

நந்திக்கடலை துப்புரவு செய்யும் போது, வட்டுவாகல் பாலத்தையும் புனரமைக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், ஆனால், இதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் தடையாக இருப்பதாகவும் கூறினார்.

இவ்விடயங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடுவதற்கு, முல்லைத்தீவு மாவட்டக் கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்தினர் தயாராக உள்ளனரெனவும், அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .