2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

பிரதேச செயலாளரை நியமிக்கவும்

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்கு பிரதேச செயலாளரை நியமிக்குமாறு இப்பிரதேச பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

கடமையில் இருந்துபோது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் கண்டாவளை பிரதேச செயலாளர் கோபாலப்பிள்ளை நாகேஸ்வரன் உயிரிழந்த நிலையில் புதிய பிரதேச செயலாளர் கண்டாவளைக்கு நியமிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கும் பொது அமைப்புகள், வடமாகாணத்தில் இலங்கை நிர்வாக சேவையின் தரம் 1 அதிகாரிகள் கூடுதலாக உள்ள நிலையில் கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு ஏன் புதிய பிரதேச செயலாளரை நியமிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளன.

பச்சிலைப்பள்ளியின் பிரதேச செயலாளரே தற்போது கண்டாவளையின் பதில் பிரதேச செயலாளராகக் கடமையாற்றும் நிலையில் இரு பிரதேச செயலகப் பிரிவுகளின் பணிகளை ஒரு பிரதேச செயலாளர் ஆற்றுகின்றார்.

இந்நிலையில் கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்கு நிரந்தர பிரதேச செயலாளரை நியமிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .