2021 மார்ச் 03, புதன்கிழமை

புத்தர் சிலையுடன் மூவர் கைது

Gavitha   / 2021 ஜனவரி 20 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு நகர்பகுதியில், பெறுமதியான புத்தர் சிலையை, வியாபாரத்துக்காக விற்பனை செய்ய முயன்ற ஹட்டனைச் சேர்ந்த மூவரை, சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

தென்பகுதியைச் சேர்ந்த குறித்த நபர்கள், பேஸ்புக் ஊடாக 06 கிலோகிராம் எடையுடைய, வெண்கல புத்தர் சிலையை, தங்கச் சிலை என்று கூறி,  முல்லைத்தீவுக்கு கொண்டு வந்து, விற்பனை செய்ய முயன்றுள்ளனர்.

இந்நிலையிலேயே, சிறப்பு அதிரடிப்படையினரால் இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .