2020 ஓகஸ்ட் 11, செவ்வாய்க்கிழமை

மணிமண்டபம் கையளிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்    

கிளிநொச்சி - பரந்தன், குமரபுரம் பகுதியில் 40 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மணிமண்டபம்,  குமரபுரம் முருகன் கோவில் நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சுப்பிரமணியம் இராசம்மாவின் பிள்ளைகள் தங்களின் பெற்றோரின் நினைவாக மேற்படி மணிடபத்தை அமைத்து  கிராம மக்களின் தேவைகளுக்காக, கோவில் நிர்வாகத்திடம் கையளித்துள்ளனர்.

இந்த நிகழ்வு, கடந்த வாரம் இடம்பெற்றது.

அத்துடன், மணிமண்டப திறப்பு விழா நிகழ்வின் போது தெரிவுசெய்யப்பட்ட நான்கு ஜோடிகளுக்கு சுப்பிரமணியம் இராசம்மாவின் பிள்ளைகளால் திருமணமும் செய்வது வைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களின் வாழ்வாதாரத்துக்கும் ஒருதொகை பணமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--