Editorial / 2020 ஏப்ரல் 26 , பி.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
அண்மையில் விடுமுறையில் வீடுகளுக்கு சென்று திரும்பிய முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றும் 71 இராணுவ வீரர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகந்தன் தெரிவித்தார்.
ஏப்ரல் 21ம் திகதியன்று, விடுமுறை நிறைவு செய்து முல்லைத்தீவு மாவட்டத்துக்குத் திரும்பும்போது, இவர்களுடன் கூட பயணித்த வெலிசரை கடற்படை முகாமில் பணியாற்றும் ஸ்ரீபுரவை சேர்ந்த கடற்படை வீரர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
இதனையடுத்தே, குறித்த நடவடிக்கையை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளதாக, அவர் தெரிவித்தார்.
புதுமாத்தளன் பகுதில் உள்ள இராணுவ பயிற்சி முகாமில் புதிதாக அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் முகாமில் 71 படையினரையும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் 38 பேர் இன்று காலை அந்த தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .