2021 பெப்ரவரி 24, புதன்கிழமை

முல்லைத்தீவில் 18 குளங்கள் வான் பாய்கின்றன

Niroshini   / 2021 ஜனவரி 14 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், தொடர்ச்சியாக பெய்துவரும் பருவ மழையால், குளங்களின் நீர் மட்டம் அதிகாரித்து வான்பாய்கின்றன.

மாவட்ட கமநல சேவைத் திணைக்களத்தின் கீழ் உள்ள சிறிய குளங்கள் அனைத்தும் வான்பாய்ந்து வருகின்ற நிலையில், பெரு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள முத்தையன் கட்டுக்குளத்தினை தவிர ஏனைய 18 குளங்களும் வான்பாய்கின்றன.

இதையடுத்து, தண்ணிமுறிப்பு குளத்தின் மூன்று வான்கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.

தொடர்ச்சியாக மழை பெய்துவருவதால், குளங்களின் நீர் மட்டம் அதிகரிக்கும் அதேவேளை, குளங்களின் வான் பாயும் தாழ்நில விவசாய பிரதேசங்கள் பல, நீரில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .