2021 பெப்ரவரி 24, புதன்கிழமை

’வன் மினிற்’ ஊழியருக்கு கொரோனா

Niroshini   / 2021 ஜனவரி 17 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பஸார் பகுதியில் உள்ள  'வன் மினிற்' ஆடை விற்பனை நிலையத்தில் கடமையாற்றும் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் றோய் பீரிஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், குறித்த நபர் தற்போது சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன், கடந்த 7ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை, குறித்த ஆடை விற்பனை நிலையத்துக்குச் சென்ற வாடிக்கையாளர்கள், அவருடன் தொடர்பை பேணிய நண்பர்கள் உடனடியாக தமது பிரதேசத்தில் உள்ள பொது சுகாதார வைத்திய அதிகாரி அல்லது பொது சுகாதார பரிசோதகர்களை தொடர்பு கொண்டு, தங்களின் விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .