Editorial / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
பலாலி விமான நிலையத்தின் நுழைவாயில் இருந்த இடத்திலே மீளவும் அமைக்கப்படவேண்டுமெனத் தெரிவித்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முண்ணணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், இல்லையேல் வயாவிளான் மக்கள் போராட்டத்தில் குதிப்பரெனவும் எச்சரிக்கை விடுத்தார்.
அவரது கட்சி அலுவலகத்தில், நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், நல்லாட்சி அரசாங்கத்தால் காணி விடுவிப்பை மேற்கொள்வோமெனச் சூளுரைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், மயிலிட்டி பகுதியில் விமான நிலைய விஸ்தரிப்புக்கென காணி சுவீகரிக்கும் நடவடிக்கையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டா இருக்கின்றார்களெனவும் கேள்வியெழுப்பினார்.
பலாலி விமான நிலையத்தை மீளவும் சிவில் மக்களுக்காக திறக்க முயல்வதும் அதனை பிராந்திய விமான நிலையமாக உருவாக்குவதும் வரவேற்கபட வேண்டிய விடயமெனத் தெரிவித்த அவர், ஆனால் இதுவரை காலமும் விமான நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், கிழக்கு பக்கமாகத்தான் அதனுடைய வாசல் இருந்தது என்பதும் போக்குவரத்துக்கான வழி இருந்தது என்பதும் வெளிப்படையான விடயமெனவும் கூறினார்.
தற்போது மேற்கு பக்கத்தில் நுழைவாயில் அமைக்கும் பணியில், இராணுவத்தினரும் விமானப்படையினரும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அவர், கிழக்கு பக்கம் இருந்த நுழைவாயிலை மாற்றி, அதை மேற்கு பக்கமாக தெல்லிப்பளை வைத்தியசாலை வீதி வழியாக சென்று மேற்கு பக்கம் உள்ள நுழை வாயிலலை அடையவேண்டும் என்ற நோக்கத்தோடு அமைக்கப்படுகிறதெனவும் கூறினார்.
நிச்சியமாக அதனுடாக மக்களுக்குச் சொந்தமான பல நூற்றுக்கணக்காக காணிகள், அநியாயமாக சுவீகரிக்கப்படுமெனத் தெரிவித்த அவர், இது திட்டமிட்ட செயல் என்றே எண்ண தோன்றுகிறதெனவும் கூறினார்.
ஆகவே, விமான நிலையம் செயற்பட தொடங்குவதற்கு முன்னாக, நுழைவாயிலை மாற்ற வேண்டுமெனவும், அவர் மேலும் கூறினார்
20 minute ago
29 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
29 minute ago
2 hours ago
2 hours ago