2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

’வரட்சி நீடித்தால் நீர் விநியோகத்தில் சிக்கல் வரும்’

Editorial   / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் மேற்கொள்ளப்படுகின்ற நீர் விநியோகமானது, இரண்டு நாள்களுக்கு ஒரு தடவையே விநியோகிக்கப்படுவதாகத் தெரிவித்த மாவட்ட நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, வரட்சியான வானிலை தொடர்ந்து நீடித்தால், இரண்டு நாளுக்கு ஒரு தடவை வழங்கும் குடிநீர் விநியோகத்திலும், நெருக்கடி நிலை ஏற்படுமெனவும் கூறியுள்ளது.

இது குறித்து தொடர்ந்துரைத்த மாவட்ட நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர், கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக, நீர்நிலைகளில் நீர் வற்றியதால், குடிநீருக்கான நீரைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.

குறிப்பாக, கிளிநொச்சி குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாகத் தெரிவித்த சபையினர்,. அதிகளவு பாசி காணப்படுவதால் நீரின் நிறமும் மாற்றமடைந்துள்ளதாகவும் கூறினர்.

இதனால், நாளொன்றுக்கு, 700 மீற்றர் கீயூப் நீரைச் சுத்திகரித்து வழங்கி வந்த நிலைமை மாறி, தற்போது சுமார் 350 மீற்றர் கீயூப் நீரையே சுத்திகரித்து வழங்க முடிவதாகக் கூறிய சபையினர், தம்மால் 14 கிராம அலுவலர் பிரிவுகளுக்கே, குழாய் வழி நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறதெனவும் தெரிவித்தனர்.

தற்போது நிலவும் வரட்சியான வானிலை தொடர்ந்து நீடித்தால், இரண்டு நாளுக்கு ஒரு தடவை வழங்கும் குடிநீர் விநியோகத்திலும், நெருக்கடி நிலை ஏற்படுமெனவும், சபையினர் மேலும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X