2020 பெப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - கந்தன்குளம் கிராமத்தில் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் நீண்ட நாட்களாக இயங்கிவந்த களுத்தவறனையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம் ஒன்றில், இன்று ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா - பூவரசங்குளம் கிராமர் சேவகர் பிரிவுக்குட்பட்ட கந்தன்குளம் சந்தியில் இயங்கி வரும் கள்ளுத்தவறனையினால், புலவர்நகர், குருக்கள் ஊர், கந்தங்குளம், பூவரசங்குளம்  ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த கள்ளுத்தவறனையை உடனடியாக அகற்றக்கோரி  இன்று காலை 10 மணியிலிருந்து 12 மணிவரை கந்தன்குளம் சந்தியில், பாடசாலை மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும்  பொது மக்களும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்பாட்டம் தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் அலைபேசியில் உரையாடிய பிரதேச செயலாளர் குறித்த கள்ளுத் தவறனையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இணக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .