2020 ஜூலை 11, சனிக்கிழமை

வவுனியாவில் வெடிபொருட்கள் மீட்பு

க. அகரன்   / 2019 ஜூன் 12 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா வேலங்குளம் பகுதியில் உள்ள தோட்ட காணியிலிருந்து வெடிபொருட்களை பூவரசங்குளம் பொலிஸார் இன்று (12) மீட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

நேற்று வவுனியா வேலங்குளம் பகுதியில் உள்ள தனியார் காணியை அதன் உரிமையாளர் உழவியந்திரம் மூலம் பண்படுத்தியுள்ளார். இதன்போது  உரப்பொதியில் சுற்றிக்காணப்பட்ட சந்தேகத்துக்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த பூவரசங்குளம் பொலிஸார் குறித்த உரப்பொதியை சோதனை செய்து பார்த்தபோது 5 கைக்குண்டுகள் இருப்பதை அவதானித்து  சம்பவம் தொடர்பாக குண்டு செயலிழக்கும் பிரிவுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து மீட்கப்பட்ட குண்டுகளை செயலிழக்க  வைத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .