Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 மார்ச் 03 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
வவுனியா நகரம் 1500 கோடி ரூபாய் செலவில் நவீனமயப்படுத்தப்படவுள்ளது. அதற்குரிய திட்டங்கள் யாவும் தயாரிக்கப்பட்டுள்ளது என வவுனியா நகரசபை தலைவர் ஜி.நாதன் தெரிவித்தார்.
42 மில்லியன் ரூபாய் செலவில் பூந்தோட்டம் மயானத்தில் கட்டப்படவுள்ள மின்சாரத்தில் சடலங்களை எரியூட்டும் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்று கலந்துக்கொண்டு பேசும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஒரே தடவை இரண்டு சடலங்களை எரியூட்ட கூடிய வசதி கொண்ட நிலையங்கள் கட்டப்படவுள்ளன. இதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி வடமாகாண சபையின் ஊடாக நிதி உதவிகளை வழங்கியுள்ளது.
வவுனியா பாக் வீதியில் உள்ள நெல் சந்தைப்படுத்தும் சபை கட்டிடத்தில் நிலைகொண்டுள்ள விசேட அதிரடிப்படையினர் அங்கிருந்து வெளியேற இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இந்த இடத்தில் தீயணைப்பு படைப்பிரிவு அலுவலகம் திறக்கப்படும்.
வடமாகாண ஆளுநர், நகர சபை மைதானத்தினை புனரமைத்து ஸ்ரேடியம் ஒன்றினை அமைப்பதற்காக தனது நிதியிலிருந்து 36 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளார்.
நகர சபை வாசிகசாலையில் சிறுவர் பிரிவு ஆரம்பிக்க வெளிநாட்டு நண்பர்கள் மூலம் 10 மில்லியன் ரூபா கிடைத்துள்ளது.
வவுனியா நகரில் இன்னும் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago