2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

வர்த்தகர் கடத்தல் விவகாரம்: சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி-விவேகராசா)

கடத்தப்பட்ட வவுனியா  வர்த்தகர் மாரிமுத்து கதிர்காமராசா கப்பப் பணம் செலுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக கைதான இருவரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிவான் எம்.கணேசராசா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை காலை இருவரும் சிறைக்காவலர்களினால் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, அடையாள அணிவகுப்பு அடுத்த மாதம் 3 ஆம் திகதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுலை மாதம் 24 ஆம் திகதி இரவு கடத்தப்பட்ட குறித்த வர்த்தகர் ஆறு இலட்சம் ரூபாய் பணம் செலுத்திய பின்னரே விடுவிக்கப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையை அடுத்து, இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .