Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2010 டிசெம்பர் 13 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு மாணவர்களை சேர்ப்பதற்காக 5 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை நன்கொடை என்ற பெயரில் பலவந்தமாக பணம் அறவிடப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.
ஏதிர்வரும் 2011ஆம் ஆண்டு தரம் 1 இற்கு மாணவர்களை சேர்ப்பதற்காக மன்னார் நகரில் உள்ள பாடசாலைகளுக்கு பெற்றோர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கச் செல்லுகின்றனர்.
ஆனால் பாடசாலை நிர்வாகம் மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பதாக இருந்தால் 5 ஆயிரம் ரூபாய் முதல் 20ஆயிரம் ரூபாய் வரை நண்கொடை என்ற பெயரில் பணம் அறவிடுவதாக பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.
அரச பதவி வகிப்பவர்களின் பிள்ளைகளுக்கு குறைந்த அளவில் பணமும், ஏனையோரின் பிள்ளைகளுக்கு கூடியளவு பணமும் அறவிடப்படுகின்றது.
சில பாடசாலைகளில் பழைய மாணவர்களை வைத்தும், ஏணைய பாடசாலைகளில் அதிபர் ஆசிரியர்களினுடாக பணம் அறவிடப்படுவதாக பணம் செலுத்திய பெற்றோர் தெரிவிக்கின்றனர். பணம் செலுத்துபவர்களுக்கு எவ்விதமான பற்றுச்சீட்டுக்களும் வழங்கப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஒவ்வெரு வருடமும் இது போன்ற சம்பவம் இடம் பெற்று வருவதாகவும் மன்னார் வலயக் கல்வித் திணைக்களம் இவ்விடையத்தில் மௌனம் காட்டி வருவதாகவும் பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ்விடையம் தொடர்பாக மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.ஆபேல் றெவ்வலை தொடர்பு கொண்டு கேட்ட போது, 'மேற்படி பணம் அறவிடப்படுவது சட்டத்திற்கு முறனானது என்றும் பணம் அறவிடப்படும் அதிபர், ஆசிரியர்கள் அடையாளம் காணப்பட்டால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
மேற்படி பணம் அறவிடப்படுவது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெற்றோர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
10 minute ago
41 minute ago
1 hours ago