Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 21 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவரத்தினம்)
வவுனியாவில் முன்னறிவித்தலின்றி நிறுத்தப்படும் மின்சார விநியோகத்தால் தாங்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக வவுனியா நகர பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக முன்னறிவித்தலின்றி மின்சார விநியோகம் தடைசெய்யப்பட்டு வருவதால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவித்த அப்பகுதி மக்கள், இரவு நேரங்களில் திருடர்களின் நடமாட்டம் இருப்பது தெரிந்தும் நீண்டநேரமாக மின்சாரத்தை தடைசெய்கின்றனரென கூறினர்.
இவ்வாறு மின்சாரத்தை நிறுத்துவதாகவிருந்தால் முன்கூட்டியே அறிவித்தல் வழங்கும் பட்சத்தில் மாற்று ஏற்பாடுகளை செய்யக்கூடியதாக இருக்குமெனவும் அந்த மக்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வவுனியா மில் வீதியில் நான்கு மணித்தியாலங்கள் மின்சாரத்தடைப்படுத்தப்பட்டது. பிரதான வர்த்தக நிலையங்களை உள்ளடக்கிய இப்பிரதேசத்தில் மின்சாரத் தடை ஏற்பட்டமையினால் வர்த்தகர்கள் பெரும் இடையூறுகளுக்கு முகம் கொடுத்தனர். மின்சாரசபைக்கு பல தடவைகள் தெரிவித்தும் அவர்கள் முறையான நடவடிக்கை மேற்கொள்ளவில்லையெனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், திடீரென மின்சாரம் அதிகரித்து வருவதால் வீட்டிலுள்ள இலத்திரனியல் சாதனங்களும் பழுதடைவதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
28 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
51 minute ago