2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி

Kogilavani   / 2013 ஜூலை 26 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சி.சிவகருணாகரன்


கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது.

கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இதன் ஆரம்ப நிகழ்வின்போது விருந்தினர்களான வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, கிளிநொச்சி மாவட்ட படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், இலங்கை வர்த்தக ஒன்றியத்தின் தலைவர் குமார மல்லவராச்சி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன்,

'கிளிநொச்சியில் முதன் முதலாக நடைபெறும் இந்த வர்த்தகக் காட்சி, வன்னிப்பிரதேசத்தின் பொருளாதார நடவடிக்கைகளிலும் அபிவிருத்தியிலும் மக்களின் வாழ்க்கையிலும் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த

வர்த்தகக்காட்சியை வன்னிப்பிரதேச மக்கள் தமக்கு வாய்ப்பாகப்பயன்படுத்திக் கொள்ளவேண்டும்' என தெரிவித்தார்.
இக்கண்காட்சியில், உள்ளூர் உற்பத்திப்பொருட்கள் முதல் சர்வதேச உற்பத்திகள் வரையில் பல்வேறு விதமான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பொருட்களின் விற்பனையும் நடைபெறுகிறது. குறிப்பாக விவசாய மேம்பாட்டுக்கு இந்தக் கண்காட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--