2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

வவுனியாவிலும் காணாமல் போனவர்களின் விபரம் திரட்டப்படுகின்றது

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 17 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவ் ஆணைக்குழுவுக்குரிய விபரங்களை பெறும் நோக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான விபரம் திரட்டும் வேலைகள் வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு விபரங்களை சமர்ப்பிப்பதற்காக மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு இந்த பதிவினை மேற்கொண்டுள்ளது.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகியவற்றில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று வவுனியாவில் இடம்பெற்றது. நாளையதினம் மன்னாரில் இடம்பெறவுள்ளது.

இதன்போது, 1990 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை யுத்தத்தின் காரணமாகவும் கடத்தப்பட்டும் காணாமல் போனவர்களினுடைய விபரங்கள் கோரப்பட்டுள்ளது. இதில் காணாமல் போனவர்களது தற்போதைய குடும்ப நிலை, எதிர்பார்க்கும் உதவி என பல வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.

பல குடும்பங்கள் கண்ணீருடன் வந்து எதிர்பார்ப்புக்களுடன் பதிந்து செல்வதை காணக்கூடியதாகவிருந்தது. இது தொடர்பில் காணமல் போனவர்களின் உறவினர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், இப்படி எத்தனை தரம் நாங்கள் பதிவு செய்துவிட்டோம். எத்தனை பேரினுடைய வாசல்படியெல்லாம் ஏறிவிடடோம். ஆனா எங்கட மகனை இன்னம் கண்டுபிடித்து தரவில்லை. இதுவும் ஒரு ஏமாற்றும் வேலையாகும் என்றார்.

இது தொடர்பில் மன்னார் பிரஜைகள் குழு செயலாளர் கருத்துத் தெரிவிக்கையில்,

1990 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையான யுத்த காலப்பகுதியில் காணாமல் போனவர்களது விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. மேற்படி ஆணைக்குழுவானது  காணாமல் போனவர்களினுடைய விபரங்களை இம் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்பு அனுப்பி வைக்குமாறு ஊடகங்கள் மூலம் தெரிவித்தது.

இதனால் மக்களின் நலன் கருதி வடமாகாணகாணாமல் போன உறவுகளின் குடும்பங்களின் சங்கமும் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவும் இணைந்து இவ் விபரங்களைத்திரட்டி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கவுள்ளது எனத் தெரிவித்தார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X