2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

தம்பிராசா மீண்டும் போராட்டம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 25 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

கிளிநொச்சி, தர்மபுரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள பாலேந்திரன் ஜெயக்குமாரியையும்  (வயது 50) அவரது மகள் பாலேந்திரன் விபூசிகாவையும் (வயது 13) விடுவிக்குமாறு கோரி  எதிர்வரும் 27ஆம் திகதி யாழ். தெல்லிப்பழை துர்க்கையம்மன் கோவிலுக்கு  முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தை  முன்னெடுக்கவுள்ளதாக அடக்கு முறைகளுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா தெரிவித்தார்.

இதன்போது, வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறும் இடம்பெயர்ந்த மக்களுக்கு இடைநிறுத்தப்பட்ட நிவாரணத்தை மீளவும் வழங்குமாறும் வலியுறுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

தம்பிராசா ஏற்கெனவே பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து பல தடவைகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .