2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

கிளிநொச்சி சர்வதேச விளையாட்டரங்கு பணிகள் செப்டெம்பரில் நிறைவு

Super User   / 2014 ஏப்ரல் 06 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சியில் 300 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விளையாட்டு மைதானத்தின் வேலைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அளவில் நிறைவு பெறும் என கிளிநொச்சி மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன் இன்று (06) தெரிவித்தார்.

குறித்த மைதானம் அமைக்கும் பணிகள் எப்போது முடிவடையும் என அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

'நவீன வசதிகளைக் கொண்டு சர்வதேச தரத்தில் இந்த மைதானத்தை அமைக்கும் பணிகள் 2012 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டன.

தொடர்ந்து துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் நிறைவடையும் அதேவேளை மிக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X