2020 நவம்பர் 28, சனிக்கிழமை

சட்டவிரோதமாக மணல் கொண்டுசென்ற நால்வர் கைது

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஸீன் ரஸ்மின்


முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் கடந்த இரு நாட்களாக மேற்கொண்ட வீதிச் சோதனையின்போது, சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற 04 பேரை கைதுசெய்ததாக  முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், மணல் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரங்களையும் கைப்பற்றியதாகவும்  பொலிஸார் கூறினர்.

மணல் மற்றும் பொறல் மணலை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வைத்திருக்காத குற்றச்சாட்டிலேயே மேற்படி 04 பேரையும் கைதுசெய்ததாகவும் இவர்களை பொலிஸ் பிணையில் விடுவித்ததாகவும் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--