மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்;பட்ட எருக்கலம் பிட்டி பகுதியில் உள்ள மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளில் வதியும்... "> Tamilmirror Online || மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் காணிக்கச்சேரி

2020 ஓகஸ்ட் 12, புதன்கிழமை

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் காணிக்கச்சேரி

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 07 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்;பட்ட எருக்கலம் பிட்டி பகுதியில் உள்ள மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளில் வதியும் பொதுமக்களுக்கான காணிக்கச்சேரி கடந்த இரு தினங்களாக நடைபெற்றதாக சிரேஷ்ட காணி அதிகாரி கே.வசந்தன் தெரிவித்தார்.

அரசின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லினக்க ஆணைக்குழுவின் வேலைத்திட்டத்திற்கு அமைவாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வதியும் பொதுமக்களுக்கு குடியிருப்பதற்கு அரச காணிகளை வழங்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் மன்னார் பிரதேச  செயலாளர் பிரிவைச் சேர்ந்த எருக்கலம்பிட்டி கிராமத்தில் உள்ள 4 கிராம சேவையாளர் பிரிவுகளில் 3 பிரிவுகளில் வதியும் பொதுமக்களுக்கான காணிக்கச்சேரியே இவ்வாறு இடம்பெற்றுள்ளதாக சிரேஷ்ட காணி அதிகாரி கே.வசந்தன் மேலும் தெரிவித்தார்.

எருக்கலம்பிட்டி பெரியபள்ளிவாசல் மதிரிசா கட்டிடத்தில் புதன்கிழமை இடம்பெற்ற குறித்த காணிக்கச்சேரிக்கு மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் தலைமை தாங்கியதுடன் மன்னார் பிரதேச செயலக காணிக்கிளை உத்திகோகத்தர்கள் மற்றும் கிராம சேவையாளர்கள் உற்பட பெரும் எண்ணிக்கையான பொதுமக்களும் கலந்து கொண்டதாக காணி அதிகாரி கே.வசந்தன் தெரிவித்தார்.

மேலும் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாகதாழ்வு மற்றும் மாதோட்டம் கிராமங்களிலும் எதிர்வரும் 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சிறுத்தோப்பு கிராமத்திலும் பொது மக்களுக்கான காணிக்கச்சேரி நடைபெறவுள்ளதாக சிரேஷ்ட காணி அதிகாரி கே.வசந்தன் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--