2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

திருவிழாவை நடத்துவதற்கு அனுமதி

Editorial   / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர்  கோவிலில் திருவிழாவை நடத்துவதற்கு பொலிஸாரால் கோரப்பட்ட தடை உத்தரவு விண்ணப்பத்தை, வவுனியா நீதவான் நீதிமன்றம், இன்று (16) நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர்  கோவிலில் நாளையதினம் திருவிழா நடைபெறவிருந்த நிலையில், அதனை தடுக்கும் விதமாக குற்றவியல் சட்டக்கோவையின் 106ஆவது பிரிவின் கீழ் தடைஉத்தரவு விண்ணப்பத்தை வவுனியா நீதிமன்றில் நெடுங்கேணி பொலிஸார் தாக்கல் செய்தனர். 

இந்த விண்ணப்பத்தை இன்றையதினம் இதனை ஆராய்ந்த நீதவான், தடை உத்தரவு விண்ணப்பத்தை நிராகரித்ததுடன், திருவிழாவை நடத்துவதற்கு அனுமதி வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--