Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2010 நவம்பர் 01 , பி.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
1570: வடகடலில் ஏற்பட்ட பாரிய அலைகளினால் ஹொலண்ட் மற்றும் ஜுட்லன்ட் தீவுகளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர்.
1895: அமெரிக்காவில் பெற்றோலிய எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்களுக்கிடையிலான முதலாவது பந்தயம் நடைபெற்றது. (முதல் பரிசு : 2000 டொலர்கள்).
1898: விளையாட்டுப் போட்டிகளின்போது அணிகளை உற்சாகமூட்டும் சியர்லீடிங் கலை அமெரிக்காவின் மினசோட்டா பல்கலைக்கழகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது.
1914: ஒட்டோமான் இராஜ்ஜியம் மீது ரஷ்யா யுத்தப் பிரகடனம் செய்தது.
1953: பாகிஸ்தானை இஸ்லாமிய குடியரசாக அந்நாட்டு நாடாளுமன்றம் அறிவித்தது.
1963: தெற்கு வியட்னாம் ஜனாதிபதி என்கோ டின் டியெம், இராணுவப் புரட்சியொன்றின் பின் கொல்லப்பட்டார்.
1964: சவூதி அரேபிய மன்னர் குடும்பப் புரட்சியொன்றின் மூலம் நீக்கப்பட்டு, அவரின் சகோதரர் பைஸால் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டார்.
1964: தென்கொரிய சியோல் நகரில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 78 பேர் பலி.
1995: தென்னாபிரிக்காவில் நிறவெற கால ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த ஜெனரல் மக்னஸ் மலன் மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் 10 பேர் 1987 ஆம் ஆண்டு 13 பேரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
2007: தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், இலங்கை விமானப்படையின் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Jul 2025
05 Jul 2025