Super User / 2011 பெப்ரவரி 19 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
1674: இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் மூலம் 3 ஆவது ஆங்கில – டச்சு யுத்தம் முடிவுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக டச்சு காலனியான அமெரிக்காவின் நியூ ஆம்ஸ்டர்டம் பிராந்தியம் இங்கிலாந்துக்கு ஒப்படைக்கப்பட்டு, அதன் பெயர் நியூ யோர்க் என மாற்றப்பட்டது.
1807: அமெரிக்க முன்னாள் உப ஜனாதிபதி ஆரோன் பர் கைது செய்யப்பட்டார்.
1861: ரஷ்யாவில் பண்ணை அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
1942: சுமார் 250 ஜப்பானிய விமானங்கள், அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரை தாக்கின. 243 பேர் பலி.
1959: பிரிட்டனிடமிருந்து சைப்பிரஸ் சுதந்திரம் பெற்றது.
1978: தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சைப்பிரஸில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானமொன்றை எகிப்திய படையினர் மீட்க முயன்றபோது இரு நாடுகளின் படைகளுக்கும் ஏற்பட்ட மோதலில் 15 எகிப்திய வீரர்கள் பலி.
1985: ஸ்பெய்ன் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 148 பேர் பலி.
1986: மீர் விண்வெளி நிலையத்தை சோவியத் யூனியன் விண்ணுக்கு ஏவியது.
11 minute ago
46 minute ago
51 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
46 minute ago
51 minute ago
58 minute ago