2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: ஏப்ரல் 22

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 21 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1906: நவீன ஒலிம்பிக் போட்டிகளின் 10 ஆவது ஆண்டு நிறைவையொட்டி விசேடஒலிம்பி போட்டியொன்று ஏதென்ஸில் ஆரம்பமானது.

1945: யூகோஸ்லாவியாவின் குரோஷிய மாநிலத்தில் தடுப்பு முகாமொன்றில் கைதிகள் கிளர்ச்சி செய்தபோது 502 பேர் பலியாகினர்.

1970: உலகின் முதல் தடவையாக பூமி தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

1992: மெக்ஸிகோவில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவமொன்றில் 206 பேலியாகினர்.

1997: அல்ஜீரிய கிராமமொன்றில்  93 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

1997: பெரு நாட்டில் ஜப்பானிய தூதரகத்தில் 4 மாதங்களாக நீடித்த பணய நாடகத்தை தாக்குதல் மூலம் இராணுவத்தினர் முறியடித்தனர்.

2000: இரண்டாவது ஆனையிறவுச் சமரில் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் ஆனையிறவு முகாம் வீழ்ந்தது. 8 வருடங்களின்பின் இம்முகாமை இலங்கை இராணுவத்தினர் மீண்டும் கைப்பற்றினர்.

2004: வடகொரியாவில் இரு ரயில்கள் மோதியதால் 150 பேர் பலியாகினர்.

2005: போர்க்காலத்தில் ஜப்பான் இழைத்த தவறுகளுக்காக அந்நாட்டு பிரதமர் ஜுனிசிரோ யொய்சுமி மன்னிப்பு கோரினார்.

2006: நேபாளத்தில் ஜனநாயகத்தை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது 206 பேர் காயமடைந்தனர்.

2010: மெக்ஸிகோ வளைகுடாவில் 'டீப் வாட்டர் ஹொரைஸன்; எண்ணெய் அகழ்வு நிலையம் வெடிப்புக்குள்ளாகி 2 நாட்களாக தீப்பற்றிய நிலையில் கடலில் மூழ்கியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .