Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Super User / 2011 ஜனவரி 22 , மு.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
1849: இந்தியாவில் 9 மாதங்களாக நீடித்த இரண்டாவது ஆங்கில - சீக்கிய யுத்தம் முடிவுக்கு வந்தது.
1901: தனது தாயார் விக்டோரியா ராணியார் இறந்ததையடுத்து 7ஆம் எட்வர்ட் பிரித்தானிய மன்னரானார்.
1915: மெக்ஸிகோ ரயில் விபத்தில் 600 இற்கும் அதிகமானோர் பலி.
1917: முதலாம் உலக யுத்தத்தின்போது நடுநிலை வகித்துக்கொண்டிருந்த அமெரிக்காவின் ஜனாதிபதி வுட்ரோ வில்ஸன், ஐரோப்பாவில் 'வெற்றி தோல்வியில்லாத சமாதானத்தை' வலியுறுத்தினார்.
1927: உலகில் வானொலியில் முதல் தடவையாக நேரடி வர்ணனை செய்யப்பட்ட கால்பந்தாட்டப் போட்டி இங்கிலாந்தின் ஆர்செனல் மற்றும் ஷீபீல்ட் யுனைட்டெட் கழகங்களுக்கிடையில் நடைபெற்றது.
1946: சி.ஐ.ஏ.வுக்கு முன்னோடியான விளங்கிய மத்திய புலனாய்வுக் குழு (சி.ஐ.ஜி.) ஸ்தாபிக்கப்பட்டது.
1969: சோவியத் யூனியன் தலைவர் பிரஸ்னேவை சுட்டுக் கொலை செய்ய துப்பாக்கிதாரியொருவர் முயன்றார்.
1970: போயிங் 747 விமானம் தனது முதலாவது வர்த்தக சேவையை அமெரிக்காவில் ஆரம்பித்தது.
1973: நைஜீரியாவில் போயிங் 707 விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 176 பேர் பலி.
1984: அப்பிள் மெகின்டொஷ் கணினி இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1991: வளைகுடா யுத்தத்தின்போது இஸ்ரேல் மீது ஈராக் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. 96 பொதுமக்கள் காயமடைந்தனர்.
2006: பொலிவியாவில் ஈவோ மொராயல்ஸ் ஜனாதிபதியானார். அந்நாட்டின் ஜனாதிபதியாக முதல் பழங்குடி இனத்தவர் மொராயல்ஸ் ஆவார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
59 minute ago
02 Jul 2025