Super User / 2010 செப்டெம்பர் 23 , பி.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
1674: இந்தியாவின் மராட்டிய மன்னன் சத்திரபஜி சிவாஜிக்கு இரண்டாவது தடவையாக முடிசூட்டப்பட்டது.
1683: அமெரிக்காவில் பிரான்ஸின் கட்டுப்பாட்டிலிருந்த காலனிகளிலிருந்து யூதர்கள் அனைவரையும் 14 ஆம் லூயி மன்னன் வெளியேற்றினார்.
1688: ஜேர்மனிக்கு எதிராக பிரான்ஸ் யுத்தப் பிரகடனம் செய்தது.
1789: அமெரிக்க சட்டமா அதிபர் அலுவலகம், உயர் நீதிமன்றம் உருவாக்கப்பட்டன. அமெரிக்காவின் முதலாவது பிரதம நீதியரசராக ஜோன் ரே, ஜனாதிபதி ஜோர்ஜ் வாஷிங்டனால் நியமனம்
1951: சோவியத் யூனியன் அணுகுண்டு பரிசோதனை நடத்தியது
1957: ரொடிஸியாவில் (தற்போதைய ஸிம்பாப்வே) வெள்ளையின ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து பெரும்பான்மை கறுப்பின ஆட்சியை ஏற்படுத்த வெள்ளையின அரசாங்கம் இணங்கியது.
1980: ஈரானிய கார்க் தீவிலுள்ள எண்ணெய் விநியோக நிலையம் மீது ஈராக் குண்டுத்தாக்குதல் நடத்தியது.
1996: ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி ரப்பானியின் அரசாங்கத்திற்கு எதிராக பேராடிய தலிபான்கான் தலைநகர் காபூலுக்குள் நுழைந்தனர்.
1996: அமெரிக்காவும் ஏனைய அணுவாயுத நாடுகளும் அணுவாயுத சோதனை மற்றும் தயாரிப்பை நிறுத்துவது தொடர்பான முக்கிய உடன்படிக்கையொன்றில் கையெழுத்திட்டன.
1988: சியோல் ஒலிம்பிக் போட்டிகளின் 100 மீற்றர் ஓட்டத்தில் கனேடிய வீரர் பென் ஜோன்ஸன் 9.79 விநாடிகளில் ஓடி தங்கப்பதக்கம் வென்றார். ஊக்கமருந்து சோதனையில் வெற்றிபெறத் தவறியதால் 2 நாட்களின் பின் அவரின் பதக்கம் பறிக்கப்பட்டது.
2006 :தென்னிந்திய நடிகை நாட்டியப் பேரொளி பத்மினி காலமானார்.
23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025