2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: நவம்பர் 5

Super User   / 2010 நவம்பர் 05 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

1872: அமெரிக்காவில் பெண்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மீறும் விதமாக சுசான் பி. அந்தனி எனும் பெண் வாக்களித்தார். பின்னர் அவருக்கு 100 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.
 

1895: ஜோர்ஜ் பி ஷெல்டன் என்பவர் அமெரிக்காவில் முதல் தடவையாக வாகனத்திற்கான காப்புரிமை பெற்றார்.


1911: ஒட்டோமான் இராஜ்ஜியத்துக்கு எதராக போர்ப் பிரகடனம் செய்த இத்தாலி, திரிபோலியை (லிபியா) தன்னுடன் இணைத்துக்கொண்டது.

1937: ஜேர்மனியில் அடோல்வ் ஹிட்லர், இரகசிய கூட்டமொன்றை நடத்தி, ஜேர்மனியர்களுக்கு 'வாழ்வதற்கான இடத்தை' பெற்றுக்கொள்வதற்கான தனது திட்டம் குறித்து அறிவித்தார்.


1940: அமெரிக்காவில் பிராங்கிளின் டி ரூஸ்வெல்ட் மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாகத் தெரிவானார்.


1952:அமெரிக்காவில் ஜெனரல்  டி.ஐஸனோவர் வரலாற்றில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார்.
 

1995: கனடாவில் பிரதமர் ஜீன் செரிஷனை கொல்வதற்கு முயற்சி. 


1996: பாகிஸ்தானில் பிரதமர் பெனாஸிர் பூட்டோவின் அரசாங்கத்தை ஜனாதிபதி பாருக் லெகாரி கலைத்தார்.
 

2007:சந்திரனுக்கு சீனா அனுப்பிய முதலாவது செய்மதி, சந்திரனை வலம் வரத் தொடங்கியது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .