2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

வரலாற்றில் இன்று: நவம்பர் 7

Super User   / 2010 நவம்பர் 06 , பி.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

1916: ஜெனட் ஜாக்ஸன் அமெரிக்க நாடாளுமன்ற அங்கத்தவராக தெரிவு  செய்யப்பட்ட முதலாவது பெண்ணானார்.


1919: சோவியத் யூனியனின் ஒக்டோபர் புரட்சியின் இரண்டாவது வருட நிறைவையொட்டி அமெரிக்காவில் கம்யூனிஸ்ட்டுகள் என சந்தேகிக்கப்பட்ட சுமார் 10000 பேர் கைது செய்யப்பட்டனர்.


1941: சோவியத் யூனியனின் மருத்துவ கப்பலொன்று ஜேர்மனியின் தாக்குதலினால் மூழ்கடிக்கப்பட்டது. 5000 பேர் பலி.

1944: பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் நான்காவது தடவையாக அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகி சாதனை படைத்தார். இதைத் தொடர்ந்தே ஒருவர் 2 தடவைகளுக்கு மேல் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாதென்ற சட்டம் கொண்டுவரப்பட்டது.

1956: சுயஸ்கால்வாய் நெருக்கடியின்போது பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகள் தமது படைகளை எகிப்திலிருந்து உடனடியாக வாபஸ் பெற வேண்டுமென ஐ.நா.பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது.

1991: அமெரிக்க கூடைப்பந்தாட்ட நட்சத்திரமான மெஜிக் ஜோன்ஸன், தனக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதாக அறிவித்து போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார்.

1994: அமெரிக்காவின் வடகரோலினா பல்கலைக்கழகத்தின் மாணவர் வானொலி நிலையத்தினால் உலகின் முதலாவது இணைய வானொலி ஒலிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது.

2000: ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க முதற்பெண்மணியாக விளங்கியபோதே நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவான முதலாவது நபரானார்.
 


  Comments - 0

  • MADHANAN NATARAJAN Monday, 08 November 2010 06:41 PM

    தமிழர்களின் சமுதாயத்தின் prathipalippu இந்த வெப்சைட்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .