2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

11-07-2010 தொடக்கம் 17-07-2010 வரையான அனைத்து ராசிகளுக்குமான பலன்கள்

A.P.Mathan   / 2010 ஜூலை 13 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

11-07-2010 தொடக்கம் 17-07-2010 வரையான அனைத்து ராசிகளுக்குமான பலன்கள்

மேஷம்
இந்தவாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். ஒருசிலருக்கு தாய் வழியிலான சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து சொத்துக்கள் கிடைக்கும். மற்றவர்களை நம்பி, பணம் மற்றும் பொருட்களைக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் மன நிம்மதி அடைய வாய்ப்பு உள்ளது. தாயின் உடல் நிலையில் இது நாள்வரையில் இருந்து வந்துள்ள பாதிப்புகள் குறைந்து நிம்மதி அடைவீர்கள். புதியவர்களுடன் சேர்ந்து புதிய தொழில் முயற்சிகளைச் செய்வதில் நல்ல பலன் அடைவீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் பெரிய மனிதர்களின் தலையீட்டால் நல்லதொரு முடிவுக்கு வரும். கணவன் - மனைவி உறவுகள் சுமாராக காணப்படும். காதல் விசயங்களில் மிகுந்த கவனமுடன் செயல்படுவது நல்லது. வடக்கு திசையில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். மேஷ ராசியினருக்கு பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இடபம்
இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். திடீர் அதிர்ஷ்டம் மூலமாகப் பணம் வந்து சேரலாம். உடல்நிலையில் உஷ்ணம், சளி போன்ற தொல்லைகள் வந்து போகும். பொது தொண்டுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மனநிறைவை அடைவீர்கள். நீண்ட காலமாகத் திருமணம் ஆகாதவர்களுக்கு உறவினர்களின் ஆதரவுகளால் திருமணம் நடைபெறும். சமுதாய வளர்சிகளுக்கான விடயங்களில் ஈடுபட்டு மன மகிழ்ச்சியும் பரிசு மற்றும் பாராட்டுகளையும் பெறுவீர்கள். விபரீதமான எண்ணங்களால் வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடலாம். குலதெய்வ ஆலய வழிபாடுகளுக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். விளையாட்டுத் துறைகளைச் சார்ந்தவர்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுக்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. வீடு மாற்றம் செய்வதற்கான புதிய முயற்சிகளில் வங்கிகளின் ஆதவுகள் கிடைக்கும். நாட்பட்ட பழைய கடன்கள் அடைபடும். பழைய வீடு மற்றும் வாகனங்களை விற்று புதிய வீடு வாகனம் வாங்குவதற்காக முயற்சிப்பீர்கள். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

மிதுனம்
இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். உற்றார் மற்றும் உறவினர்களின் எதிர்பாராத திடீர் வரவுகளால் பொருட் செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் ஆதாயங்களை அடைவீர்கள். அரசு சம்பந்தமான வழக்கு விடயங்களில் சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். வெளிநாடுகள் சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் வேற்று மதத்தவர்களால் ஆதாயங்களை அடைவீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் சற்றுக் குறைந்து காணப்படுவதன் மூலம் நிம்மதி அடையலாம். குடும்பத்தில் நடக்க இருக்கும் சுபகாரிய நிகழ்ச்சிகளைச் சற்று தள்ளிப் போடுவது சிறந்ததாகும். நீண்டகாலமாக உத்தியோகம் இல்லாத படித்த இளைஞர்களுக்கு புதிய உத்தியோகம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்க இன்னும் சற்று காலதாமதம் ஆகலாம். கும்பத்தில் வீணாக ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

கடகம்
இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். உற்றார் உறவினர்களின் திடீர் வரவுகளால் பொருட் செலவுகள் வந்தாலும் அவர்களால் சில ஆதாயம் அடைவீர்கள். உடம்பில் நரம்பு, இரத்தம் போன்ற சில உபாதைகள் வந்து போகலாம். மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களை கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். நீண்ட காலமாக வராத பணம் காவல் துறையினரின் உதவிகளால் திரும்பி வந்து சேரும். வேற்று மதத்தவரால் ஆதாயம் ஏதும் இல்லை. வங்கிகளில் பணி ஆற்றுபவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அரசியல்வாதிகளால் எதிர்பாராத சில ஆதாயங்கள் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு இதுவரையில் இருந்து வந்த தடைகள் நீங்கித் திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளது. பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி முன்னேற்றமான சூழ்நிலைகள் உருவாகும்.
உத்தியோகத் துறையினர்களுக்கு பணி இட நிரந்தரமும் சம்பள உயர்வுகளும் உண்டாகும். அலுவலகங்கள் மற்றும் வீடுகளை இடமாற்றம் செய்யப் போட்டிருந்த திட்டங்களில் சற்று பின்னடைவு உண்டாகலாம். நிலம் சம்பந்தமான விடயங்களில் ஈடுபட்டு நற்பலன்களை அடைவீர்கள். படித்த வேலை இல்லாத இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்ப்புகள் வந்து சேரும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

சிம்மம்
இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். உடம்பில் எலும்பு மற்றும் நரம்பு போன்ற உபாதைகள் வந்து போகும். குழந்தைகளின் மன மகிழ்ச்சிகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகத் துறையினருக்கு இடமாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் நிலையில் கண், காதுகளில் மிக கவனமாய் இருப்பது நல்லது. குடி இருக்கும் வீட்டில் காரணமில்லாத சில பிரச்சினைகள் ஏற்பட்டு புதிய வீடு மற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தாயின் உடல் நிலையில் மிக கவனமுடன் இருப்பது நல்லது. அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் வீண் பிரச்சினைகள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லதாகும். சொத்து விடயமாகப் புதிய பிரச்சினைகளைச் சந்தித்து வெற்றி பெறுவீர்கள். வீடு, வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலம் பொருட் செலவுகள் வந்து சேரலாம். பிரிந்துபோன கணவன் - மனைவி திரும்ப ஒன்று சேருவார்கள். பிள்ளைகளின் உடல் நிலையில் கவனமுடன் இருப்பது நல்வது. செய்யாத குற்றங்களுக்கு அவப் பெயர் சேர வாய்ப்பு உள்ளதால் கவனமுடன் இருக்கவும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

கன்னி
இந்தவாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். இரும்பு, இயந்திரம், இரசாயனம், பழைய பொருட்கள் வியாபாரிகள், பல சரக்கு, எண்ணெய், பெற்ரோல் மற்றும் டீசல் போன்ற பொருட்களை விற்பனை செய்வோர்கள் நற்பலன் அடைவார்கள். திருமண விடயங்கள் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளைச் சற்று தள்ளிப் போடுவது நல்லதாகும். ரேஸ், அதிர்ஷ்டலாபச் சீட்டு போன்றவற்றின் மூலமாக பணம் மற்றும் பொருட்களை இழக்காமல் இருக்கவும். நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த சொத்து சம்பந்தமான வழக்கு விடயங்களில் காவல்துறையினர்கள் உதவிகளால் திரும்பக் கிடைக்கும். நீண்ட காலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணங்கள் மற்றும் பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்பக் கைக்கு வந்து சேரும். யாத்திரையின்போது சம்பந்தம் இல்லாத புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சிலகாரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். விவசாயம் செய்பவர்களுக்கு சுமாரான விளைச்சல் உண்டாகும். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகளுக்காக புதிய கடன் வாங்க முயற்சிப்பீர்கள்.
யாத்திரையின்போது மிக கவனமுடன் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது சிறந்ததாகும். காதல் சம்பந்தமான விடயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும் காலமாகும். மற்றவர்களின் விடயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு வீண் சிக்கலில் மாட்டிக் கொண்டு மன நிம்மதியை இழக்க வேண்டாம். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

துலாம்
இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் - மனைவி உறவுகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. வேண்டாத விடயங்களில் தலையிட்டு மன நிம்மதி இழக்காதிருங்கள். நண்பர்களால் வீண் பொருட் செலவுகள் வந்து சேரலாம். தந்தை வழியிலான சொத்துக்கள் கை வந்து சேர வாய்ப்பு உள்ளது. நாட்பட்ட பழைய பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்கும். மாணவர்கள் கல்வியில் மிகுந்த கவனமுடன் பயின்று வருதல் நல்லது. தீராத நோய்கள் தீருவதற்காக நீண்ட தூர பயணங்களை மேற் கொள்ளுவீர்கள்.
வேலையாட்களால் சிற்சில மன நிம்மதி இன்மையும் பொருட் செலவுகளும் வந்து சேரும். விட்டுப்போன பழைய உறவுகள் மீண்டும் தொடரும் காலமாகும். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத் தொழிற் செய்வதற்கான முயற்சிகளில் சற்று பின்னடைவுகள் ஏற்பட்டாலும் மிகுந்த பிரயாசையின் பேரில் சரி செய்து விடுவீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்ப்பதால் வீண் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். நீண்ட காலமாக விடுபட்டுப்போன பழைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் புதிய தொடர்புகள் ஏற்படலாம். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

விருச்சிகம்
இந்தவாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். யாத்திரையில் சம்பந்தம் இல்லா நபர்களின் மூலம் வீண் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிட இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணம் செய்வது நல்லதாகும். குழந்தைகள் உயரமான இடங்களில் கவனமுடன் ஏறி இறங்குவது நல்லது. உத்தியோகத் துறையினர்கள் மேலதிகாரிகளுடன் மனக் கசப்புகள் ஏற்பட்டு பணி இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் முன் கோபத்தை தவிர்த்துப் பணி ஆற்றுதல் சிறந்ததாகும். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் எதிர்பார்த்து இருந்த நபர்களின் ஆதரவுகள் கிடைக்கும். பழைய கடன்களை அடைத்துவிட்டுப் புதிய கடன் வாங்குவதற்காக முயற்சிப்பீர்கள். அநாதைச் சிறுவர்களுக்கு உதவுவதிலும், பொதுநலத் தொண்டுகளில் ஈடுபடுவதிலும் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள். அரசியல்வாதிகளுடன் எதிர்பாராத தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சிற்சில ஆதாயம் அடைவீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்துவந்துள்ள பிரச்சினைகள் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் திரும்ப கிடைக்கும். குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர முயற்சிப்பீர்கள். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

தனுசு
இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பிரிந்துபோன கணவன் மனைவி திரும்ப ஒன்று சேருவதற்கான வாய்ப்பு உள்ளது. சொத்து சம்பந்தமான வழக்கு விடயங்களுக்காகப் புதிய வழக்கறிஞர்களை நாடுவீர்கள். நாட்பட்ட தீராத நோய்கள் தீருவதற்காக புதிய மருத்துவர்களின் உதவிகளை நாடுவதன் மூலம் நோய் தீரும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான வழக்கு விடயங்களில் சம்பந்தம் இல்லாத நபர்களின் ஆதரவுகளால் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் வீட்டுச் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். புதிய ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்குவீர்கள். மனைவி வழியிலான சொந்த பந்தங்களுடன் சிற்சில கருத்து வேறுபாடுகள் வந்து போகலாம். பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். வீடு மற்றும் வாகனங்களை பழுது பார்ப்பதன் மூலம் பொருட் செலவுகள் வந்து சேரக் கூடியகாலமாகும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

மகரம்
இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும். புதிய ஆடை ஆபரணங்களை வாங்குவதைச் சற்று தள்ளிப் போடவும். விட்டுப் போன பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்பட்டாலும் அவர்களால் பெயர் புகழ் போன்றவை கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் மிகுந்த எச்சரிக்கையுடன் பயின்று வருவது நல்லது. வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பதற்கு முயற்சிப்பீர்கள். தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் பிரச்சினைகள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. விவசாயம் செய்பவர்களுக்குப் புதியமுறை விவசாயங்கள் மூலம் நல்ல லாபம் அடைவார்கள். குல தெய்வ ஆலயங்களைத் திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விளையாட்டுத்துறை சார்ந்தவர்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுதல் கிடைக்கும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

கும்பம்
இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். புதிய கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. கோர்ட் வழக்கு சம்பந்தமான விடயங்களில் நல்ல சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். காதல் விடயத்தில் நண்பர்களின் உதவியால் நல்ல தகவல்கள் வந்து சேரும். புதிய கடன்கள் கொடுப்பதைத் தவிர்த்தல் நல்லதாகும். வர வேண்டிய பணம் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். ரேஸ், அதிர்ஷ்டலாபச் சீட்டு போன்ற திடீர் அதிர்ஷ்டம் மூலமாகப் பொருள் வந்து சேர வாய்ப்பு உள்ளது. புதிய வீடு நிலம் போன்றவற்றை விலைக்கு வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும் காலமாகும்.
வேலை இல்லாதவர்கள் புதிய வேலை வாய்ப்புகளுக்காக பணம் பொருட்களைக் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். உடல் நிலையில் வாயு, வாத சம்பந்தமான தொல்லைகள் வந்து போகும். குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக நீண்ட தூர உல்லாசப் பயணங்களை மேற்கொள்வீர்கள். தந்தை, மகன் உறவுகளில் இருந்துவந்துள்ள மனக் கசப்புகள் குறைந்து ஒற்றுமையுடன் காணப்படுவார்கள். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

மீனம்
இந்தவாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். தந்தை- மகன் உறவுகளில் காரணமற்ற முன் கோபத்தால் பிரச்சினைகள் உருவாகலாம்.
வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்களது உறவுகளைக் காண தாய்நாடு சென்று வருவீர்கள். வெகு காலமாகக் காணாமற்போன பொருட்கள் மற்றும் நபர்கள் திரும்பி வர வாய்ப்பு உள்ளது. யாத்திரை கவனமுடன் சென்று வரவும். வீடு மற்றும் வாகனங்களைப் புதிதாய் வாங்குவதற்கான திட்டங்களில் சற்று பின்னடைவுகள் ஏற்படும். எதிர்பாராதவிதமாக நண்பர்களால் சில ஆதாயங்களும் மன மகிழ்ச்சியும் அடைவீர்கள். கணவன் -மனைவி உறவுகளில் இருந்துவந்த நீண்டகால மனக் கசப்புகள் தீர்ந்து ஒற்றுமையுடன் காணப்படுவார்கள். பிள்ளை இல்லாதவர்களுக்கு இறையருளால் புத்திர பாக்கியம் கிடைக்கும் காலமாகும். வரவேண்டிய மனைவி வழிச் சொத்துக்களும் மற்றும் பணமும் கை வந்து சேரும் காலமாகும். புதியவேலை வாய்ப்புகளுக்காக மற்றவர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--