2020 நவம்பர் 28, சனிக்கிழமை

இந்தவார பலன்கள் (24.10.2010 – 30.10.2010)

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 23 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தவார பலன்கள் (24.10.2010 – 30.10.2010)
 

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

எதிலும் குழந்தையாக செயற்படும் குணமும் ஆன்மீக, தெய்வீக அனுஷ்டானங்களில் அதிக பற்றுள்ள மேட ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு குடும்பத்தில் உற்றார், உறவினர்களின் அன்பையும் ஆதரவையும் முழுமையாக பெற வாய்ப்பு கிடைக்கும். புதிய திட்டங்களை செயல்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும், இதனால் நல்ல லாபத்தை பெற்றுக்கொள்ளலாம். வியாபாரத்தை மேம்படுத்த அரச ஒத்துழைப்பு கிடைக்கக்கூடும். உடல் சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும், ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். தேவையற்ற வாக்குவாதங்களினால் மனசங்கடங்கள் ஏற்படும், வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். பொழுதுபோக்குகளுக்காக சேமிப்பைவிட அதிக செலவுகளை மேற்கொள்வீர்கள். புதிய நண்பர்களின் நட்புக்கள் நம்பிக்கை தரக்கூடும். திடீர் பயணங்கள் பயணிப்பதால் அனுகூலம். வார இறுதியில் பெரிய மனிதர்களின் முன்மாதிரிகளை பெற்று உற்சாகத்துடன் பணிகளை தொடங்கலாம்.

அதிர்ஷ்ட திகதி: 27
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி


 

கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எப்பொழுதும் மற்றவர்களை கவரும் வகையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் திறனும் பிறர் பார்வையில் நன்மதிப்பு பெற்ற இடப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு நிம்மதியான நித்திரை நிறைவாக கிடைக்கும். தொழில் விரித்திக்காக அதிக அலைச்சல்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். புதிய காரியங்களை தொடங்கும்போது சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். நெருங்கிய நண்பர்களின் நட்புக்கள் நம்பிக்கையை தரும். குடும்பத்தில் உற்றார், உறவினர்களின் வருகையினால் குதுகலம் ஏற்படக்கூடும். பிரயாணங்கள் பயணிப்பதால் புதிய அனுபவங்களை பெற்றுக்கொள்ளலாம். பண பிரச்சினைகளினால் பிறரின் உதவியை நாடவேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். வெளிதேசங்களில் இருந்து இன்பகரமான செய்திகள் உரிய நேரத்தில் வந்து சேரும். விநோத விளையாட்டுகளில் ஈடுபடும்போது அவதானம் தேவை. வார இறுதியில் ஏற்றத் தாழ்வுகளை மறந்து நன்மைகளை செய்வதனால் வாழ்வு வளம் பெறும்.

அதிர்ஷ்ட திகதி: 27
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்
வழிபாடு: பிரம்மா


 

மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9-பாதங்கள்.

நகைச்சுவையாக பேசும் திறனும் சாதரணமான விடயத்தில் கூட புத்திசாலித்தனத்துடன் செயற்படும் குணமும் கொண்ட மிதுன ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு நவீன தொழில் தொடங்குவதற்கு அரசாங்க வழியில் உதவிகள் கிடைக்ககூடும். இதனால் தனவரவுகளை பெற்றுக்கொள்ளலாம். புதிய வேலைகள் உங்கள் முயற்சிக்கும் திறமைக்கும் ஏற்ப அமையும். பயணங்கள் பயணிப்பதால் புதிய வழிகள் கிடைக்க கூடும். உயர் அதிகாரிகளுடன் சுமூகமான உறவை வைத்துகொள்வது நல்லது. குடும்பத்தில் சகோதரர்களுக்கிடையே அன்யோன்யம் பலப்படும். நண்பர்களுடன் பொழுதுபோக்குகளில் ஈடுப்படும்போது அவதானம் தேவை. திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரவாய்ப்புண்டு. சில உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும், ஆரோக்கியத்தை பாதுகாக்கவும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படகூடும். வார இறுதியில் மகான்களின் அனுகிரகத்தை பெற்று மனநிறைவுடன் செயல்பட சந்தர்ப்பம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 25
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்  
வழிபாடு: பிரம்மா


 

புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

சூழ்நிலைக்கு தக்கவாறு செயல்களை செய்யும் ஆற்றலும் பொதுநலத்தில் அதிக அக்கறை கொள்ளும் கடகராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு நண்பர்களுடன் பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதன் மூலம் அதிக செலவுகளை மேற்கொள்வீர்கள். எந்த முயற்சிகள் எடுத்தாலும் அதில் இடையூறுகள் ஏற்படக்கூடும், அவதானத்துடன் செயல்படவும். குடும்ப உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சங்கடங்கள் விலகி மனநிறைவு ஏற்படும். தூய உடைகள் அணிய வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரத்தில் மேல் அதிகாரிகளால் போட்டிகள் ஏற்படக்கூடும். இசைத்துறையில் அதிக ஆர்வத்தை செலுத்துவீர்கள். பெண்களுடன் எதிர்பாராத கருத்து வேறுபாடுகள் உருவாகலாம். பிறர் மனதை காயப்படுத்தாவண்ணம் வார்த்தைகளை பிரயோகிக்கவும். புண்ணிய தலங்கள் சென்று இறைவழிபாடுகளில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும். வார இறுதியில் சஞ்சலங்கள் யாவும் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 27
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

நிர்வாக திறமை இயற்கையிலே நிறைந்து காணப்படும். அதிக சுதந்திரத்தை விரும்பும் சிம்ம ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் நினைத்த காரியத்தை சாதித்து வெற்றி அடையலாம். சில புதிய ஆடை, உபகரணங்கள் கிடைக்க கூடும். தொழிலில் விருத்தியடைய அரசாங்க ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்க வாய்புண்டு. கடினமான பேச்சுவார்த்தைக்கு இடமுண்டு. நிதானத்துடன் நடக்கவும். குடும்பத்தில் பெண்களினாலும் உறவினர்களினாலும் உதவியும் அனுகூலமும் ஏற்படும். நாவுக்கு சுவையான ஆகாரம் கிடைக்கும். வெளிபிரயாணங்களில் ஈடுபடுவதன் மூலம் லாபம் கிடைக்க கூடும். நெருங்கிய நண்பர்களின் நட்பு வட்டங்கள் விரிவடையும். உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியத்தில் அவதானம் தேவை. வார இறுதியில் நமது வாழ்க்கையின் முன் உதாரணமாக இருக்கக்கூடிய பெரியவர்களை கண்டு ஆசிர்வாதத்தை பெற்றுகொள்ள வாய்ப்புகிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 26
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்
வழிபாடு: நவகிரகம்உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

உடல் உழைக்காமல் மூளையை மூலதனமாகக் கொண்டு செயல்படும் திறனும் தெய்வீக சிந்தனையில் நாட்டம் உள்ள கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு வெளிதேசங்களில் இருந்து இன்பகரமான செய்திகளை கேள்விபடுவீர்கள். தீய நண்பர்களின் சகவாசங்களினால் சில சிக்கல் ஏற்படக்கூடும். சிந்தித்து செயல்படவும். தொழில் ஸ்தானத்தில் உயர் அதிகாரிகளுடன் மற்றும் சக ஊழியர்களுடன் பகை ஏற்பட வாய்ப்புண்டு. தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கக்கூடும். சில எதிர்பாராத திருட்டுக்கள் ஏற்படலாம், அவதானம் தேவை. விசித்திரமான பொருள்களை காணக்கிடைத்தல். புதிய திட்டங்களை மேற்கொள்ள பிறரின் உதவிகளை நாடவேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். குடும்பத்தில் உறவினர்களின் அன்யோன்யம் வலிமைபெறும். விசேடமாக பெண்களால் உதவியும் மகிழ்ச்சியும் ஏற்படும். வார இறுதியில் இறைவன் அருளால் சிக்கல்கள் விலகி சிறப்பான வழிகிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 30
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுதுணி
வழிபாடு: குருபகவான்
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

உள்ளத்தில் அதிக தைரியமும் 'வாழ்வியல் கலையை' முழுமையாக வாழ்வில் பின்பற்றும் துலா ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் இசைதுறையில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்கள், நண்பர்கள் வருகையால் குதுகலம் ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும், அதனால் எதிர்பார்த்தபடி பணவரவு கூடும். புதிதாக செயல்படுத்த உள்ள திட்டத்தில் வெற்றி காண்பீர்கள். அழகிய ஆடை - ஆபரணங்கள் பரிசாக கிடைக்கக்கூடும். அவ்வப்போது உடலில் சில உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியமான ஆகாரங்களை உட்கொள்வது நல்லது. வாகன சாரதிகளுக்கு தூரபிரயாணத்தால் லாபம் ஏற்படும். விநோத அம்சங்களுக்கு அதிக செலவுகளை மேற்கொள்வீர்கள். சிலவேளையில் மன சங்கடங்கள் ஏற்பட்டு மறையும். மனநிறைவான தூக்கம் கிடைக்கும். வார இறுதியில் விசேட பிரார்த்தனை, பூஜைகளை செய்வதனால் மன அமைதியை பெற்றுக்கொள்ளலாம்.

அதிர்ஷ்ட திகதி: 30
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுதுணி
வழிபாடு: குருபகவான்

சந்திராஷ்டமம்:
ஒக்டோபர் 24ஆம் திகதி காலை 05.44 மணியிலிருந்து ஒக்டோபர் 27ஆம் திகதி மாலை 01.35 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

தோல்விகளை கண்டு துவளாமல் தெய்வீக சிந்தனையில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திகொள்ளும் விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு குடும்பத்தில் பெண்களின் ஒத்துழைப்பு அதிகரிப்பதுடன் நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட எதிர்ப்புக்கள் விலகி அரசாங்க உதவிகள் தேடிவரக்கூடும். உயர் அதிகாரிகளுடன் அனுசரணையாக நடப்பது நல்லது. நண்பர்களுடன் விநோத விளையாட்டுகளில் ஈடுபடுவதனால் அதிக செலவுகளை மேற்கொள்வீர்கள். தூர பயணங்கள் பயணிக்க சந்தர்ப்பம் கிடைப்பதுடன் அதன் மூலம் அதிர்ஷ்டத்தை பெற்றுக்கொள்ளலாம். பிறர் பிரச்சினைகளை பற்றி பேசுவதனால் அது நமக்கே துன்பத்தை தரும். வெளிதேசங்களில் இருந்து இன்பகரமான செய்திகளை கேள்விப்படுவீர்கள். வார இறுதியில் கடவுளை தரிசித்து ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்ளலாம்.

அதிர்ஷ்ட திகதி: 24
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
வழிபாடு: பெருமாள்

சந்திராஷ்டமம்:
ஒக்டோபர் 27ஆம் திகதி மாலை 01.35 மணியிலிருந்து ஒக்டோபர் 29ஆம் திகதி மாலை 07.25 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

ஞானத்திலும் அறிவிலும் உயர்ந்தவர்களிடம் நட்பு வைத்திருப்பீர்கள், எல்லோரையும் அனுசரித்து செல்லும் தனுசு ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் பணவரவுகள் எதிர்பார்த்தபடி அமையாது. இதனால் பிறரின் உதவியை நாடவேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். தொழில் ஸ்தானத்தில் சக ஊழியர்களுடன் சுமூகமான உறவை வைத்துக்கொள்ளவும், இல்லையெனில் மன சங்கடங்களுக்கு வழிவகுக்கும். அறிமுகமற்ற நண்பர்களின் சகவாசங்களை தவிர்ப்பது நல்லது. கடின உழைப்பினால் மேற்கொள்ளும் திட்டங்கள் வெற்றியை பெற்றுத்தரும்;. உயர் அதிகாரிகளுடன் சில வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். பொழுது போக்குகளுக்காக அதிக பணம் செலவிடுவீர்கள், சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. வார இறுதியில் பெரிய மனிதர்களின் தகுந்த ஆலோசனைகள் தெளிவற்ற மனதுக்கு ஆறுதலாக அமையும்.   

அதிர்ஷ்ட திகதி: 27
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி

சந்திராஷ்டமம்:
ஒக்டோபர் 29ஆம் திகதி மாலை 07.25 மணியிலிருந்து ஒக்டோபர் 31ஆம் திகதி மாலை 11.04 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

மற்றவர்களின் மீது அளவுகடந்த பாசம் உள்ளவர்கள். ஒழுக்கம், உண்மை இரண்டும் வாழ்க்கையில் பின்பற்றும் மகர ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு வியாபாரத்தில் தேங்கிக்கிடந்த வேலைகளை உடனுக்குடன் முடிப்பீர்கள். சிந்தித்து திட்டமிட்டு செயற்படும் காரியங்கள் வெற்றியை பெற்று தரும். புண பற்றாகுறை நீடித்தாலும் பிறர் உதவி எதிர்பாராது பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தவும். குடும்பத்தாருடன் சுற்றுலா பயணங்கள் செல்லுவதன் மூலம் அனுகூலம் ஏற்படும். சாப்பாட்டில் வெறுப்பு தன்மை ஏற்படுவதுடன் உடல் சோர்வுகள் வந்து செல்லும், நலனை பாதுகாக்கவும். பெண்களின் அன்பும் அக்கறையும் பெற்று கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் உற்சாகம் ஏற்படும். நண்பர்களுக்கிடையே ஒற்றுமை ஏற்படக்கூடும். வெளிதேச செய்திகள் உரிய நேரத்தில் வந்து சேரும். வார இறுதியில் பெரிய மனிதர்களின் வழிகாட்டலால் சிந்தனைகள் யாவும் மேன்மை பெறும்.  

அதிர்ஷ்ட திகதி: 27
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

புராதன காவியங்கள், இலக்கியங்களில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். எதிர்பார்ப்புக்கள் இன்றி பழகும் பண்பு உள்ள கும்ப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு சில பிரச்சினைகள், சிக்கல்கள் ஏற்பட்டு நீங்கும், நிதானத்துடன் செயல்படவும். உணவால் அஜீரண கோளாறு ஏற்படக்கூடும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். தொழிலில் அதிகாரிகளின் போட்டிகள் அதிகரிப்பதுடன் மனசங்கடங்கள் உருவாகும். குடும்பத்தில் பெண்களின் உபசரிப்பு அதிகரிக்கக் கூடும். இதனால் மகிழ்ச்சி ஏற்படும், நீண்ட நாட்களின் பின் தொலைந்த பொருள் கிடைக்கக் கூடும். சிந்தித்து செயல்படும் காரியங்கள் வெற்றியை பெற்று தரும். பிறருடைய பிரச்சினைகளை கையாளாமல் இருப்பது நல்லது. நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேர வாய்ப்புண்டு. வார இறுதியில் தோல்விகளை கண்டு துவளாமல் இறைவனை முழு மனதோடு தரிசித்து நன்மை பெறவும்.

அதிர்ஷ்ட திகதி: 27
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.

கள்ளம் கபடம் இல்லாமல் வெளிப்படையாக பேசுவீர்கள், யாரிடமும் தாழ்ந்து போகாத எண்ணமுமுள்ள மீன ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு இன்பகரமான செய்திகளை கேள்விப்படுவீர்கள். நட்புகளுக்கிடையே நல்லுறவு வளரும், இதனால் உற்சாகம் ஏற்படும். புதிய முயற்சிகளை முன்னெடுப்பதற்கு அதிக அலைச்சல்களை மேற்கொள்ளவேண்டியிருக்கும். தொழில் ஸ்தானத்தில் சில இடமாற்றங்கள் ஏற்படக்கூடும். ஆச்சரிய பொருள்களை காணக்கிடைத்தல். அழகிய ஆடை - ஆபரணங்கள் கிடைக்க வாய்ப்புண்டு. அரசாங்கத்துறையிருந்து சில சலுகைகள் கிடைக்க இடமுண்டு. கடின பேச்சுவார்த்தைகள் ஏற்படக்கூடும், நாவடக்கம் அவசியம். நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கும், வேண்டாத செலவுகளை தவிர்ப்பது நல்லது. பயணங்கள் பயணிப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைக்கக்கூடும். வார இறுதியில் நீண்ட நாள் பிரார்த்தனையின் பலனாக மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 27
அதிர்ஷ்ட நிறம்: பிரம்மா
வழிபாடு: கறுப்பு தவிர்க்கவும்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--