2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

இந்தவார பலன்கள் (26.06.2011 - 02.07.2011)

A.P.Mathan   / 2011 ஜூன் 25 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தவார பலன்கள் (26.06.2011 - 02.07.2011)

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

நடத்தை பற்றி வருந்தாது வருவதை பற்றி கற்பனை செய்யாத குணம் கொண்ட மேட ராசி அன்பர்களே..!


இந்தவாரம் தொடக்கத்தில் திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கக்கூடும். இசைத்துறையில் ஈடுபாடு அதிகரிக்கும், இதனால் மனஅமைதி கிடைக்கும். திருடர்களிடம் மிக அவதானமாக இருப்பது நல்லது. இன்பமான உறக்கம் உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகம் தரும். பொழுதுபோக்குகளுக்கு அனாவசிய ஆடம்பர செலவுகளை மேற்கொள்ளுதல். குடும்பத்தில் சுற்றத்தின் நண்பர்களின் வருகை, மேலும் பெண்களுக்கு புதிய ஆடை அணிகலன்கள் பரிசாக கிடைக்கக்கூடும். இவ்வார இறுதியில் வெற்றியை மட்டும் குறிக்கோளாக கொண்டு வாழ்வதனால் தோல்விகள் நம்மை வெகுசீக்கிரம் தளர்வடை செய்யும், ஆகவே இரண்டையும் சாதாரணமாக ஏற்றுக்கொள்வது புத்திசாலித்தனமாகும்.

அதிர்ஷ்ட திகதி: 01
அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

நல்ல எண்ணங்களுக்கு முக்கிய இடம் கொடுக்கும், புரிந்துணர்வு அதிகம் உள்ள இடப ராசி அன்பர்களே..!


இந்தவாரம் தொடக்கத்தில் பல நவீன தொடர்புகள் தேடிவரக்கூடும். வேண்டாத பிரச்சினைகளினால் மனகஷ்டங்கள் ஏற்படும். பெரியார்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். நல்ல நண்பர்களின் நட்பு வலிமை பெறும். அரசாங்க ஊழியர்களின் உதவிகள் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் உற்றார்- உறவினர்களின் வருகையினால் மகிழ்ச்சி. ஆரோக்கியமற்ற உணவுகளினால் உடல் சம்பந்தமான நோய்கள் ஏற்படும். தூய்மையான ஆடைகளை அணியலாம். முயற்சி செய்த காரியத்தில் உரிய பலன் கிடைக்கக்கூடும். புதுமையான பொருள் காணக்கிடைக்கும். நன்மையான காரியங்களில் அதிக அக்கறை செலுத்தவும். இவ்வார இறுதியில் மனதுக்கு நிறைவு தரும் நல்ல செய்திகள் வந்து சேரும்.

அதிர்ஷ்ட திகதி: 28
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எவ்வளவு கஷ்டமான வேலைகளையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை கொண்ட மிதுன ராசி அன்பர்களே..!


இந்தவாரம் தொடக்கத்தில் குடும்பத்தில் பெண்களினால் சுபவிஷேசங்கள் நடைபெறக்கூடும். பிறரின் தவறுகளுக்காக வாதிடுவதனாலும் முன்னிற்பதாலும் அது பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். வியாபார திட்டங்களை மேல் அதிகாரிகளின் உதவியுடன் முன்னெடுக்கலாம். பொன் - பொருள் சேர்க்கை உண்டாகும். வெளிதேச பயணங்களின் போது நெருங்கிய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். காணாமல் போன பொருள் மீண்டும் கிடைத்தல். புதிய வேலைப் பணிகள் அலைச்சலை தரக்கூடும். நல்ல உறக்கம் கிடைக்கும். சில புதிய இடமாறுதல்கள் லாபகரமாக அமையும். இவ்வார இறுதியில் நீங்கள் செய்வது எதுவாயினும் அதில் முயற்சியும் தன்னம்பிக்கையும் மிக முக்கியமாகும்.

அதிர்ஷ்ட திகதி: 02
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

எல்லா நேரங்களிலும் பண்புடன் நடந்து கொள்ளும், தன்னடக்கம் அதிகம் உள்ள கடக ராசி அன்பர்களே..!


இந்தவாரம் தொடக்கத்தில் நீங்கள் முயற்சி செய்யும் காரியங்களில் தடைகள் ஏற்படக்கூடும். தொழிலில் சக ஊழியர்களுடனும் உயர் அதிகாரிகளுடனும் ஒத்துழைப்புடன் செயல்படவும். அறுசுவையான உணவுகளை உண்ணலாம். மகிழ்ச்சியுடன் உல்லாச பயணங்கள் சென்று வரலாம். புதிய நண்பர்கள் தேடி வருதல். குடும்பத்தில் சகோதர சகோதர்களின் அன்பும் அக்கறையும் அதிகரிக்கக்கூடும். ஆச்சரியமான பொருள் காணக்கிடைக்கும். பெண்களுடன் பேசும் போது வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். வரவுக்கு மீறிய செலவுகளினால் பணப் பிரச்சினைகள் ஏற்படும். இவ்வார இருதியில் வாழ்வில் துன்பம் இல்லாமல் வெற்றியில்லை உழைப்பு இல்லாமல் உயர்வு இல்லை.

அதிர்ஷ்ட திகதி: 28
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

வறுமையிலும் நிறைவு காணும் குணமும் தளராத இதயமும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!


இந்தவாரம் தொடக்கத்தில் புதிய வேலைத் திட்டங்களை மேற்கொள்வதை தவிர்க்கவும், இல்லாவிடின் தேவையற்ற சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும். நல்ல காரியங்களில் உற்சாகத்துடன் ஈடுபடலாம். மனதில் பயங்கள் குழப்பங்கள் வந்து நீங்கும். வியாபாரம் தொடர்பான முயற்சிகள் தடைப்படக் கூடும். ஒவ்வாத உணவுகளினால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும், நலனை பாதுகாக்கவும். குடும்பத்தில் பெண்களுடன் விட்டுக்கொடுத்து செயல்படவும். வெண்மையான ஆடைகளை அணியலாம். நமது வாழ்க்கையில் முன்மாதிரியாக விளங்கும் பெரியார்களை கண்டு ஆசீர்வாதம் பெற வாய்ப்பு கிடைக்கும். இவ்வார இறுதியில் எந்த விடயத்தையும் பலமுறை சிந்தனை செய்து ஒருமுறை முடிவெடுப்பது சிறந்ததாகும்.

அதிர்ஷ்ட திகதி: 27
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர்க்கவும்
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தான் செய்யும் எந்த காரியத்திலும் வாய்மையும் முன்னுரிமையும் பெற எண்ணும் கன்னி ராசி அன்பர்களே..!


இந்தவாரம் தொடக்கத்தில் நண்பர்களுடன் இணைந்து புதிய வியாபார முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மேலும் அதிக செலவுகள் ஏற்படக்கூடும். குடும்ப உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குலதெய்வ வழிபாடுகளில் நம்பிக்கையோடு ஈடுபடுவதால் நன்மைகள் உண்டாகும். சுகமான உணவுகள் கிடைக்கும். பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும். காணாமல்போன பொருள் மீண்டும் கிடைக்கக்கூடும். நவீன தொடர்புகளை பயன்படுத்தி அதிக லாபம் அடையலாம். மனதளவில் அலைச்சல்கள் ஏற்படக்கூடும். அரசாங்க வேலை வாய்ப்புகளுக்கு வழியுண்டு. இவ்வார இறுதியில் வாழ்வில் எந்த முயற்சியும் எடுக்காத வரை இறைவனின் உதவி என்றும் கிடைக்க வாய்ப்பில்லை.

அதிர்ஷ்ட திகதி: 26
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: (நவகிரகம்)


சந்திராஷ்டமம்
ஜூன் 25ஆம் திகதி மாலை 02.06 மணியிலிருந்து ஜூன் 27ஆம் திகதி காலை 01.37 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

பிறரின் கஷ்டங்களை கண்டு உதவிடும் நேர்மையான உள்ளமும் வாழ்க்கையை நேசித்து வாழும் பக்குவமும் கொண்ட துலா ராசி அன்பர்களே..!


இந்தவாரம் தொடக்கத்தில் குடும்பத்தாருடன் உல்லாச பயணங்கள் செல்ல வாய்ப்பு கிடைக்கும். உற்சாகத்துடன் அன்றாட வேலைகளை மேற்கொள்வீர்கள். அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் வியாபாரத்தில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வெற்றி அடையலாம். நல்ல உறக்கம் கிடைக்கும். நாவுக்கு சுவையான உணவுகளை உண்ணலாம். எதிர்பாராத செய்திகள் கிடைக்கக்கூடும். இசைத்துறையில் அதிக நாட்டம் காட்டுதல். பொழுதுபோக்குகளில் ஈடுபாடு அதிகரிக்கும். தேவையற்ற பிரச்சினைகளை சிந்திப்பதால் மனகஷ்டம் ஏற்படும். புதிய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும், இவ்வார இறுதியில் நீங்கள் செயல்படும் ஒவ்வொரு காரியத்திலும் அதிக நிதானம் தேவை.

அதிர்ஷ்ட திகதி: 26
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: (நவகிரகம்)


சந்திராஷ்டமம்
ஜூன் 27ஆம் திகதி காலை 01.37 மணியிலிருந்து ஜூன் 30ஆம் திகதி காலை 10.30 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

கிடைத்ததை கொண்டு திருப்தி அடையும் ஏழ்மையான குணமும் கடமையில் கண்ணாக செயல்படும் விருட்சிக ராசி அன்பர்களே..!


இந்தவாரம் தொடக்கத்தில் சிலர் தமது திறமையினால் பல சாதனைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள். குடும்பத்தில் பெண்களின் ஆதரவு கிடைக்கக்கூடும். தடைப்பட்ட காரியங்களை உடனுக்குடன் செய்து முடிக்கக் கூடியதாயிருக்கும். நல்ல செய்திகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு சற்று காலதாமதத்தை ஏற்படுத்தக்கூடும். ஒவ்வாத உணவினால் அஜீரணம் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படும், நலனில் அதிக கவனம் தேவை. நண்பர்களுடன் புதிய வேலை தொடர்பான தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். சில இடமாறுதல்கள் லாபகரமாக அமையும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. இவ்வார இறுதியில் உற்சாகத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம்.

அதிர்ஷ்ட திகதி: 27
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி

 மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

எல்லோரிடமும் பண்பாக பேசும் குணமும் பிறரை அனுசரித்து நடந்துகொள்ளும் தனுசு ராசி அன்பர்களே..!


இந்தவாரம் தொடக்கத்தில் அறிமுகமற்ற நண்பர்களுடன் அதிக பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும். தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கக்கூடும். பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது மிக கவனம் தேவை. அரசாங்க ஊழியர்களின் உதவியுடன் நல்ல தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளலாம். சிலவிதமான மனக்கவலைகள் குழப்பங்கள் வந்து நீங்கும். பொருள் திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சாப்பாட்டில் வேண்டாத வெறுப்பு தன்மை ஏற்படும், உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும். வாகன சாரதிகளுக்கு தூர பிரயாணங்களின் மூலம் அதிக லாபம் ஏற்படும். இவ்வார இறுதியில் புண்ணிய காரியங்களில் நம்பிக்கையுடன் ஈடுபடுவதால் வாழ்வில் துன்பங்கள் விலகி மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திகதி: 01
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

மற்றவர்களின் மனதை புரிந்து நடந்துகொள்ளும் மென்மையான சுபாவம் கொண்ட மகர ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் முயற்சியுடன் செய்யும் காரியங்களில் நற்பலனை அடைவீர்கள். புதிய செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் பெண்களின் அக்கறை அதிகரிக்கக்கூடும். நாவுக்கு சுவையான உணவுகளை உண்ணலாம். தூய்மையான ஆடைகளை அணியலாம். உயர் அதிகாரிகளுடன் கடின வாக்குவாதங்களுக்கு இடமுண்டு, வார்த்தைகளில் நிதானம் தேவை. இன்பமான உறக்கம் இனிதே கிடைக்கும். வியாபாரத்தில் பல அரிய நுட்பங்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை கவர்வீர்கள், இதனால் பணவரவுகள் அதிகரிக்கும். உடலுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்கவும். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும். இவ்வார இறுதியில் உற்சாகத்துடன் நினைத்ததை சாதித்து முடிக்கலாம்.

அதிர்ஷ்ட திகதி: 01
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கருத்தாழம் மிக்க எழுத்து திறமையும் கலையுணர்வு அதிகம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே..!


இந்தவாரம் தொடக்கத்தில் உற்சாகத்துடன் சுற்றுலா பயணங்கள் செல்லலாம், வியாபாரத்தில் நவீன தொடர்புகள் தேடிவரக் கூடும். அழகிய ஆடை - அணிகலன்கள் சேர்க்கை. குடும்பத்தில் சுபவிசேஷங்களின் போது சொந்தபந்தங்களின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கும். நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கக்கூடும். காணாமல்போன பொருள் மீண்டும் கிடைக்கும். மனதளவில் அலைச்சல்கள் ஏற்படும். அரசாங்க ஊழியர்களின் மூலம் புதிய வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வார இறுதியில் இறைவழிபாடுகள் பிரார்த்தனைகளில் அதிக அக்கறை செலுத்துவதால் துன்பங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திகதி: 28
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.

துன்பங்கள் சூழ்ந்து கொண்டாலும் அதை துணிச்சலுடன் நீந்தி கடந்திடும் மீன ராசி அன்பர்களே..!


இந்தவாரம் உங்களுக்கு வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல புதிய சாதனைகளை கையாண்டு வெற்றி அடையலாம். விநோத விளையாட்டுக்களுக்காக அனாவசிய ஆடம்பர செலவுகளை மேற்கொள்வீர்கள். நெருங்கிய நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் பெண்களின் அக்கறையும் அனுசரிப்பும் கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி நன்னிலை தோன்றும். சிறு பணக் கஷ்டங்கள் ஏற்படக்கூடும், கடின உழைப்பே வாழ்க்கையில் ஊன்றுகோல். மனதில் சில சலனங்கள் தோன்றி மறையும், இவ்வார இறுதியில் பெரியார்களிடம் பணிவாக செயல்பட்டால் மனதில் என்றும் பயம் இருக்காது.

அதிர்ஷ்ட திகதி: 28
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்   
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .