2021 மார்ச் 06, சனிக்கிழமை

அன்பினை முழுமையாகச் செலுத்துங்கள்...

Princiya Dixci   / 2016 மே 31 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அன்பினை முழுமையாகச் செலுத்துங்கள். இது விடயத்தில் அரை, குறை மனதுடன் செலுத்தப்படும் அன்பு, நிலையானதாகவும் இருக்க மாட்டாது.

சந்தேகமும் விசுவாசமின்மையும், மனித சுபாவமாகும். எடுத்த எடுப்பிலேயே எல்லோரையும் நம்ம முடியாது. ஆனால், அன்பான மனிதனாக்க, நாம் தயாராக இருக்க வேண்டும்.

ஆதரவு, அரவணைப்பினைப் பகிர்ந்து, பிறரிடமிருந்து தெரிந்து, தெளிந்து கொள்ளக் கால அவகாசம் தேவைப்படுகின்றது.

உளமார்ந்த பாசத்தைக் கூடத் தெரிந்துகொள்ளாதவர்களும் இருக்கின்றனர். விலகி வாழ்வது நல்லது என எவருடனும் பேசாமல், தனித்து வாழும் நபர்களுடன் பழகுதல் கடினம்.

உங்களைப் புரிந்து கொண்ட எவரினது நட்பை உதறுவது தவறு. அன்பான இதயங்களைப் பெறுவதே பெரும் தவம். எனவே, இவர்கள் மூலம் பூரண அன்பின் பெறுமதியை உணர்க.

வாழ்வியல் தரிசனம் 31/05/2016
-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .