2021 மார்ச் 01, திங்கட்கிழமை

‘ஆற்றலை வளர்க்க சந்தோசம் அவசியம்’

Editorial   / 2017 ஜூலை 19 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்பொழுதும் தங்கள் மனதைப் பாலைவனமாக வைத்திருக்கும் நபர்கள் அமைதியைக் கண்டுகொள்வது சிரமம்தான். 

பசும்சோலைக்குள் இருந்தவண்ணம், கடும் முட்கள் நிறைந்த வனத்தில் பயணம் மேற்கொள்ளும் இத்தகையவர்கள் நெஞ்சில் ஈரத்தை உள்வாங்காமல் நிம்மதி காணமுடியாது.  

மக்களுடன் மக்களாக இணைந்து வாழ்வதன் சுகானுபவத்தை உணராது, வெறும் ஜடமாக இருந்தால் எல்லாமே வெறுத்துப் போய்விடும்.  

உயிர்களை நேசிக்காதவன் நிலை, தன் உயிரையும் வரட்சியுடன் இயங்காமல் வைத்திருப்பது போலாகும். 

புன்னகையும் சிரிப்பும் இல்லாமல் பலர் இன்று வாழ்ந்துவருவது ஒருவித உயிரற்ற நிலையைப்போல இருக்கும். மனிதன் இயல்பாக மகிழ்வது சிரமமானது அல்ல; ஆற்றலை வளர்க்க சந்தோசம் அவசியம். 

   வாழ்வியல் தரிசனம் 19/07/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .