2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

இது விதியா? காலத்தின் சதியா?

Administrator   / 2016 டிசெம்பர் 13 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவனது தாயார் இறந்துபோக, தந்தை வேறோரு பெண்ணை மறுமணம் செய்து​ கொண்டார். இதனால் இவனது பாடுதான் பெரும் பரிதாபமாகி விட்டது. சிற்றன்னையின் கொடுமையால் இவன் படிப்பும் கெட்டு, அடி உதைதான் மிஞ்சியது. தந்தையும் அதனைக் கண்டுகொள்ளவில்லை.  

இந்நிலையில் ஒருநாள், அவளின் கொடுமை அதிகரிக்க, ஒரு தடியால் ஓங்கி அவளைத் தாக்கி விட்டான். விடயம் பெரிதாகிவிட, அவன் சிறுவர் சீர்திருத்தப் பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். தலையில் பலத்த அடி காரணமாகச் சிற்றன்னையும் சித்த சுவாதீனமற்றுப் போய்விட்டாள்.  

அவன் பலவருடங்களின் பின்னர் வீட்டுக்கு வந்தபோது, அவனது தந்தையே சிற்றன்னையை இதுவரைகாலமும் கவனமாகப் பராமரித்து வந்திருந்தார். இவனும் கடும்முயற்சியுடன் உழைத்து, நல்லநிலைக்கு வந்தபோது, தந்தையார் நோய் காரணமாகக் காலமாகி விட்டார். 

இப்போது சிற்றன்னையைப் பராமரிக்கும் பொறுப்பு இவனிடம் வந்தது. மனம் கோணாமல் அந்தப் பொறுப்பைச் சீராகச் செய்து வருகின்றான். இந்த நிலையில் இவனுக்குப் பெண் கொடுப்பதற்கு எவருமே முன்வரவில்லை. இன்றுவரை திருமணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றான். இது விதியா? காலத்தின் சதியா?   

வாழ்வியல் தரிசனம் 13/12/2016 

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .