2021 மே 18, செவ்வாய்க்கிழமை

உண்மையின் ஓசை உலகெங்கும் கேட்கும்!

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

உண்மையான சத்திய வாழ்வில் நம்பிக்கையுடைய பேச்சாளர்கள் எவருக்கும் அச்சப்படாமல், உள்ளதை உள்ளபடி உரை செய்வார்கள்.

தெரியாத உண்மைகளை மக்களிடம் சொல்லி அவர்களை விழிப்படையச் செய்வதில் ஏது தவறுண்டு ஐயா?

எமது முன்னோர்கள் செவி வழி மூலம் அறிந்த இலக்கிய, ஆத்மீக உன்னதப் படைப்புகளையே நாம் இன்று நூல்கள் வழியாகப் படிக்கின்றோம். அவை ஏடுகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் மூலம் பதிவு செய்யப்பட்டிருந்தன.  உள்ளதை உள்ளவாறு தமது ஞானத்தினூடாக மக்கள் மத்தியில் சொல்லி வந்துள்ளமையினால் அறநூல்கள், ஆன்மீக இலக்கியங்கள் பழைமையின் செல்வங்களாக என்றுமே அழியாமல் எம்முன்னே விழிப்பூட்டி வருகின்றன.

எனவே, பேசுவதில் உண்மை துலங்கினால் அவை என்றும் வாழும் என்பதை பேச்சாளர்களும் அறிஞர்களும் உணர வேண்டும்.

உண்மையின் ஓசை உலகெங்கும் கேட்கும்!

வாழ்வியல் தரிசனம் 03/08/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .