2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

‘உலகம் இயங்கியபடியே இருக்கும்’

Editorial   / 2017 மே 26 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர்ந்து ஊக்கத்துடன் வேலை செய்பவர்கள் ஓரிரு நாட்கள் சும்மா இருந்தால் போதும் துவண்டு, மனம் வெறுத்துப் போவார்கள். 

ஆனால், சோம்பேறிகளுக்கு இந்தப் பிரச்சினைகளே கிடையாது. உறங்கும் இடம்தேடி அலைபவர்கள், கருமங்களைச் செய்ய ஆர்வம் காட்ட முடியாது. 

உலகம் தினசரி இயங்கியபடியே இருக்கும். அதனுள் வசிக்கும் ஜீவன்களும் யுகங்கள் தோறும் ஓய்வு எடுப்பதே இல்லை. 

மனிதரில் சிலர்தான், இயங்க மறுக்கும் துருப்பிடித்த இயந்திரம் போலாகி விட்டார்கள். மரம் நிலையாக நின்றபடியே, பரந்து கிளைகளைப் பரப்பி, தன்னையும் தன்னைப்போன்ற ஜீவன்களையும் புதிதாகப் பிறப்பித்த வண்ணம் இருக்கின்றது. 

ஹே! மனிதா! மரத்தில் இருந்து கற்க வேண்டியது ஏராளம், ஏராளம். விருட்சத்தின் அங்கம் எல்லாமே இயங்கியபடியே! இயங்கியப​டியே! 

   வாழ்வியல் தரிசனம் 26/05/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .