2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

‘தெளிந்த அன்பைப் பெற்றிடுங்கள்’

Princiya Dixci   / 2017 மே 20 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எமது நாட்டில் உள்ள அரச அதிகாரிகள், அமைச்சர்களில் பலரும், குறித்த நேரத்தில் பொது நிக​ழ்ச்சிகள், மாநாடுகளுக்குச் சமூகமளிக்காமல் இருப்பது புதுமையல்ல. 

மிகச் சாதாரணமான நிகழ்ச்சிகளுக்கே பெரிய விளம்பரம் செய்யும் அரசியல்வாதிகள், தங்களுக்கு அதிகூடிய கௌரவம் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள். 

இந்த டாம்பீகமான வாழ்க்கை, எத்தனை நாட்களுக்கு? நாளைக்கு என்ன நடக்கும்? என்ப​தனை உணர்வதேயில்லை.மிகவும் பகட்டாக வாழ்ந்த ஒரு முன்னாள் அமைச்சர், பின்னாளில் பாண் வாங்குவதற்கு மக்களுடன் வரிசையில் காத்திருக்கும்போது, அவரை எவருமே கண்டுகொள்ளவில்லை. 

கடமையை ஒழுங்காகச் செய்வதுடன், எம்மைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து தெளிந்த அன்பைப் பெற்றிடுங்கள். கடமைகளைப் புறக்கணிப்பது, உலகை ஒதுக்குவது போலாகும்.  

வாழ்வியல் தரிசனம் 19/05/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .