2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

பௌத்திரமான காதல் பெரும் பாக்கியமாகும்

Administrator   / 2016 டிசெம்பர் 14 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதலர்கள் ஒருவரை ஒருவர் சரிவர முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் இருக்கும் நிலையில் அவர்களுக்கிடையே ஊடல் கொள்வது பொருத்தமாகாது. 

 ஆழமான அன்பு கொண்டால் ஊடல் புரிவது வழக்கமான ஒன்றுதான். இதனையும் அதிக நேரமாகக் கொள்வது மிகத் தவறாகும்.   

காதல் இறுக்கமடைய இறுக்கமடைய, உரிமையின் நிமித்தம் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் வார்த்தைப் பிரயோகத்திலும் நாகரிகம் இருக்க வேண்டும். ‘இவள் என்னவள்’ தானே என்று காதலனும் ‘இவர் என்னவர்’ என்று காதலியும் என்ற உரிமையில் கண்டபடி வார்த்தைகளை வௌிப்படுத்தக்கூடாது. 

மனம் எத்தருணத்திலும் காயப்படக்கூடிய ஒன்றுதான். சூழ்நிலை தெரியாமல், மனப்பாங்கு  புரியாமல் பேசுவது புத்திசாலித்தனமான காரியம் அல்ல!

நல்ல பௌத்திரமான காதல் கிட்டுவது, கணவன் மனைவிக்குரிய பெரும் பாக்கியமாகும். திருமணமாகாத காதலர்களுக்கும் இது பொருந்தும்.  

வாழ்வியல் தரிசனம் 14/12/2016 
- பருத்தியூர் பால. வயிரவநாதன்    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--