2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

வாழ்வியல் தரிசனம் 24/03/2016

Princiya Dixci   / 2016 மார்ச் 24 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூன்யமான ஓர் உலகத்தினுள் நுழைகின்றேன். என்னைச் சுற்றி ஒருவருமே இல்லை. பாலைவனமே சுற்றம்முற்றும். கேட்க ஆள் இல்லை. பசியேயில்லா வெற்றுடம்பு.

இரவு நேரம் அகண்ட, உயரிய வானத்தைப் பார்க்கின்றேன். நட்சத்திரங்கள் கண் முன்னே உருண்டு திரண்ட சந்திரன், என்னைப் பார்த்துச் சிரிக்கின்றான். இந்த வானமும் மின்னிடும் நட்சத்திரங்களும் தோழமையாயின.

எனினும், உயிருள்ள பொருள் என அருகேயில்லை. திடீரெனக் கடவுள் என் முன் தோன்றுகின்றார். என்ன வேண்டும் சொல் என்றதும், உயிருள்ள நாய் ஒன்றையாவது அனுப்பி விடு என்கின்றேன். நாய் ஒன்று வால் ஆட்டியபடி வந்தது.

பசியில்லை எனக்கு. ஆனால், நாய்க்கு உணவு தேவை. மறுபடியும் கடவுள் மறுபடியும் கோரிக்கை. மரம், செடி, கொடிகள், பசுக்களை அனுப்பு என்கின்றேன்.

எல்லாமே வந்தன. ஆசைகளும் கூட வந்தது. என் நிம்மதியை மீண்டும் குலைத்தது. மீண்டும் பிரார்த்தனை.

கடவுள் சொன்னார் சகலதையும் அனுபவி. அனுபவ ஞானம் வரும். தெளிவு வரும். இந்த மாயையே தெளிவு தரமுயலும். அதுவரை பொறுத்திரு.

மறைந்தவன் மீண்டும் வரவில்லை.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .