2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அகிலாண்டேசுரர் ஆலயத் தேர்த்திருவிழா

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 11 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ரி.விவேகராசா)

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் திருக்கோவில் அம்பாள் மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று புதன்கிழமை காலை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

மூன்று பக்தர்கள் ஒன்றாக பறவைக்காவடி சகிதம் வந்து தமது நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்கள்.

நாளை வியாழக்கிழமை ஆடிபூரத்தன்று காலை 9 மணிக்கு ஆலயக் கேணியில் தீர்தோற்சவம் நடைபெறவுள்ளது.

கடந்த 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான உற்சவ காலத்தில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--