2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் தேரோற்சவம்

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 05 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்
, நவரட்ணராசா

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது.

இன்று காலை 7.30 மணிக்கு வசந்த மண்டப பூசைகள் நடைபெற்று முருகப்பெருமான் வள்ளி தேய்வானை சகிதம் எழுந்தருளி உள்வீதி வலம் வந்ததை தொடர்ந்து காலை 10.30 மணிக்கு எம்பெருமான் தேரில் ஆரோகனித்தார்.

இந்த தேர்திருவிழாவைக்காண நாட்டின் பல பாகங்களில் இருந்து வெளிநாடுகளில் இருந்தும் வருகை தந்த ஆடியார்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானின் அருளாசிகளைப் பெற்றுக்கொண்டனர்.

அத்துடன் ஆலயத்திற்கு வந்த அடியார்கள் தங்கள் காவடிகள், தீச்சட்டி, அங்கப்பிரதட்சை போன்றவற்றைச் செய்து நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--