2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

கோட்டைக்கல்லாறு முத்துமாரியம்மன் கோவில் திருச்சடங்கு உற்சவம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 03 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மண்முனை தென்னெருவில்பற்று பிரதேசத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலின் வருடாந்த திருச்சடங்கு உற்சவம் எதிர்வரும் 05ஆம் திகதி ஆரம்பமாகி, 12ஆம் திகதி கும்பம் சொரிதலுடன் நிறைவு பெறவுள்ளதாக கோவில்  நிருவாகம் அறிவித்துள்ளது.

5ஆம் திகதி இரவு 9 மணிக்கு அம்பாள் ஆலய திருக்கதவு திறத்தலும் அன்றையதினம் நள்ளிரவு 12 மணிக்கு பூரண கும்பம் நிறுத்துதலும் இடம்பெறும்.

6ஆம் திகதி நான்காம் வட்டார மக்களின் ஆதரவிலான திருச்சடங்கும்; 7ஆம் திகதி ஐந்தாம் வட்டார மக்களின் திருச்சடங்கும் 8ஆம் திகதி முதலாம் வட்டார மக்களின் திருச்சடங்கும் 9ஆம் திகதி இரண்டாம் வட்டார மக்களின் ஆதரவிலான திருச்சடங்கும் 10ஆம் திகதி மூன்றாம் வட்டார மக்களின் ஆரதவில் தீக்குளி மூட்டுதலும் தவநிலை திருச்சடங்கும் 11ஆம் திகதி  அதிகாலை ஐந்து மணிக்கு தீ மிதிப்பும் 7 மணிக்கு மடிப்பிச்சை எடுத்தலும் விநாயகப்பானை எழுந்தழுந்தருளுதல்  பண்ணுதலும் இடம்பெற்று 12ஆம் திகதி அதிகாலை சமுத்திரத்தில் திருக்கும்பம் சொரிதலுடன் இவ்வருடாந்த திருச்சடங்கு நிறைவு பெறவுள்ளது.

நிகழ்வுகள் யாவும் சடங்குகால பிரதமகுரு சி.கிருபைராசாவின்  தலைமையில் நடைபெறும்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .