2021 மே 18, செவ்வாய்க்கிழமை

தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயம்

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 08 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கிறிஸ்தவ தேவாலயமான தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தின் வருடாந்த திருவிழா, ஞாயிற்றுக்கிழமை (08) நிறைவுபெற்றது.

கடந்த 30ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இந்த ஆலயத்தின் திருவிழாவில் நேற்று சனிக்கிழமை (07) மாலை காணிக்கை மாதாவின் திருச்சொரூப பவனி சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்திலிருந்து பெரும் எண்ணிக்கையிலான அடியார்கள் புடை சூழ அன்னையின் அலங்கரிக்கப்பட்ட திருச்சொரூபம் பவனியாக கொண்டுசெல்லப்பட்டது.

புனித காணிக்கை மாதா ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை அலெக்ஸ் ரொபடினால் திருவிழா வழிபாடுகள் நடத்தப்பட்டுவந்ததுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இறுதி நாள் திருவிழா கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான ஆயர் அருட்திரு பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் இந்த திருவிழா கூட்டுத்திருப்பலி நடத்தப்பட்டது.

இதன்போது அடியார்களுக்கு ஆயரினால் ஆசிர்வாதம் வழங்கப்பட்டதுடன் நீடித்த சமாதானம் வேண்டியும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆசிவேண்டியும் விசேட பூஜையும் நடத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து திருச்சொரூபம் கொண்டுசெல்லப்பட்டு ஆலய பங்குத்தந்தையினால் கொடியிறக்கம் செய்யப்பட்டது.

இந்த உற்சவத்தில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டதுடன் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளும் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .